கம்பராமாயணம் 5511 · சுந்தர 7.34

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சிந்துவாரம் திசைதொறும் சென்றன
சிந்து வார் அம் புரை திரை சேர்ந்தன;
தம் துவாரம் புதவொடு தாள் அறத்
தந்து வாரம் துகள்படச் சாய்ந்தவே.

பொருள் · Meaning in Tamil

சிந்து வாரம் திசை தொறும் சென்றன - (அனுமன் வீசிஎறிந்ததனால்) கரு நொச்சிமரங்கள் நான்கு திக்குகளிலும் சென்றனவாய், சிந்து வார் அம் புரை - கடலின் நீண்ட அழகிய உயர்ந்த; திரை சேர்ந்தன - அலைகளில் சேர்ந்தன; ஆரம் - (அன்றியும்) சந்தன மரங்கள்; தம் துவாரம் புதவொடு தாள் அற தந்து - தமது வாயில்களின் கதவும் தாழ்ப்பாள்களும் முறிந்து போம்படி (மாளிகைகள் மேல்) வீசி எறியப்பட்டு; துகள் படச் சாய்ந்தன - (அவைகள்) தூளாகும்படிச் சாய்ந்து விழுந்தன.

சிந்து வாரம் - கரு நொச்சி, சிந்து - கடல்; ஆரம் - சந்தன மரம்; புதவு - கழிவு; தந்து - எறியப்பட்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The nocci trees went flying in every direction
  2. and came to rest on the long, lovely, towering waves of the sea;
  3. the sandal trees, flung down so that doors and bolts were torn away,
  4. brought the mansions' own gateways crashing down to dust.

What the poem says

Aṉumaṉ's hurling scatters the nocci (sinduvāram) trees in all four directions, and they land on the waves of the ocean. The sandal trees he throws strike the mansions of Ilaṅkai, breaking off doors and bolts and grinding the gateways to powder.

The verse again plays on sounds: cintuvāram (the nocci tree) and cintu vār (the long sea), tantu āram and tam tuvāram.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cintuvāram ticaitoṟum ceṉṟaṉa
cintu vār am purai tirai cērntaṉa;
tantu āram putavoṭu tāḷ aṟa
tam tuvāram tukaḷ paṭac cāyntavē.