கம்பராமாயணம் 5515 · சுந்தர 7.38

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வாரி நேர் இயக்கு உற - கடலுக்கு நேராகச்சென்று விழும்படி; திசைதொறும் எறிந்தன - எல்லாத்திக்குகளிலும் எறியப்பட்டனவாகிய; மயக்கு இல்பொன் குல வல்லிகள் - ஒளி மழுங்குதல் இல்லாத பொன் மயமானகூட்டமாக உள்ள கொடிகள்; வெயில் கதிர்க் கற்றை அற்று உற வீழ்ந்தன - சூரிய கிரணங்களின் தொகுதி அறுபட்டு (பூமியில்) பொருந்தி வீழ்ந்தனவாகி; புயல் கடல் தலை புக்கன போல்வன - மேகங்கள் படிகின்ற கடலினிடத்துப்புகுந்தனவற்றை ஒப்பனவாயின.

அனுமன் வீசிஎறிந்ததால் கடலில் விழுந்த பொற்கொடிகளின் தொகுதி, அறுபட்டு, கடலில் புக்க சூரிய கிரணக் கற்றை போல விளங்கின. தன்மைத் தற்குறிப்பேற்ற அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The clustered creepers of undimmed gold,
  2. flung out in every direction to fall straight into the sea,
  3. were like bundles of sunbeams cut loose and dropping down
  4. and plunging into the sea where the clouds come to rest.

What the poem says

Among the treasures of the grove were creepers made of gold. Aṉumaṉ tears them out and throws them in all directions, and they fall glittering into the ocean.

The poet imagines them as sheaves of sunlight snapped off from the sun and sinking into the sea, a figure in which the poet attributes an imagined cause to a real scene.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mayakku il poṉ kula vallikaḷ vāri nēr
iyakkuṟat ticaitōṟum eṟintaṉa
veyil katirk kaṟṟai aṟṟu uṟa vīḻntaṉa
puyal kaṭaltalai pukkaṉa pōlvaṉa.