கம்பராமாயணம் 5518 · சுந்தர 7.41

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காசு அறு மணியும்பொன்னும் - குற்றம் இல்லாத இரத்தினங்களும் தங்கமும்; காந்தமும் கஞல்வது ஆய - சூரிய காந்தம், சந்திர காந்தம் என்னும் கற்களும் (ஆகிய இவற்றால்) விளங்குவதான; மாசுஅறு மரங்கள் ஆக - குற்றமற்ற மரங்களாக, குயிற்றிய - இழைத்து அமைத்த; மதனச் சோலை - மன்மதனுக்கு இருப்பிடமான அசோகவனச் சோலை மரங்கள்; ஆசைகள் தோறும் ஐயன் கைகளால் அள்ளி அள்ளி வீசிய விளக்கலாலே - எல்லாத் திக்குகளிலும் அனுமன் தன் இருகைகளாலும் வாரி வாரி வீசப்பட்டன வாய் ஒரு பெரிய ஒளியைச் செய்தமையால், உலகம் எல்லாம் விளங்கின - உலகம் முழுவதும் அந்த இருளில் நன்கு விளங்கின.

சந்திரன் மறைந்த பிறகு, ஏற்பட்ட இருள், வீசப்பட்ட மணி ஒளி மிக்க மரங்களின் ஒளியால் அகன்றது. உலகு ஒளியுடன் விளங்கியது. ஆசை - திசை; காம உணர்வு தோன்றுதற்கு ஏற்ப இராவணனால் அமைக்கப்பட்டது ஆதலின் மதனச் சோலையாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The grove of love, wrought into flawless trees
  2. glowing with spotless gems and gold and sun- and moon-stones —
  3. the lord scooped them up with his hands again and again
  4. and flung them to every quarter, and by that light the whole world shone.

What the poem says

With the moon gone, darkness should have fallen. But the trees of the grove were artificial ones of gold and jewels, set with sunstones and moonstones, and as Aṉumaṉ hurls them in every direction their brilliance lights up the whole world.

The grove is called the 'grove of Matanaṉ', the god of love, because Irāvaṇaṉ built it as a pleasure garden to stir desire.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kācu aṟu maṇiyum poṉṉum kāntamum kañalvatu āya
mācu aṟu maraṅkaḷ ākak kuyiṟṟiya mataṉac cōlai,
ācaikaḷ tōṟum aiyaṉ kaikaḷāl aḷḷi aḷḷi
vīciya, viḷakkalālē viḷaṅkiṉa ulakam ellām.