கம்பராமாயணம் 5519 · சுந்தர 7.42

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விலங்கு வெருவிக்கதறின - அசோகவனத்திலிருந்த மிருக இனங்கள் அச்சத்தால் வீறிட்டுக் கத்தின; உள்ளம் கலங்கின - மனக்கலக்கம் அடைந்தன; கண்கள் குதறின - கண்கள் புண்ணாகிப் பொங்கின; பறவை வேலை குளித்தன - அங்கிருந்த பறவை இனங்கள் கடலில் வீழ்ந்து ஆழ்ந்தன; குளித்திலாத பதறின - அவ்வாறு வீழாத பறவைகள்; பதைத்த வானில் பறந்தன - மிகவும் துடித்து, பதறினவாய்; பறந்து பார் வீழ்ந்து சிறையை உதறின - சிறிது தூரம் பறந்து (மேலே பறக்கமுடியாமல்) பூமியில் விழுந்து சிறகுகளை உதறிக் கொண்டன; மீள ஒடுக்கின உலந்து போன - ஒடுக்கிக் கொண்டனவாய் அழிந்து போயின.

அனுமன் அசோகவனத்தை அழித்ததால் அங்கிருந்த மிருகங்களும் பறவைகளும் அச்சத்தால் அடைந்த செயல்கள் கூறப்பெற்றன. பறவைகள் சிறகுகளை உதறுவது இறக்குமுன் நிகழ்ந்த சாவுக்கு அறிகுறியாகும். இப்பாடல் செய்திகளை அனுமன் மயேந்திர மலையில் காலை ஊன்றி எழுந்தபோது நிகழ்ந்த செய்திகளோடு (4758 - 4762; குறிப்பாக 4759) ஒப்பிடுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The beasts screamed in terror, their hearts in turmoil; their eyes
  2. grew sore and swollen; the birds plunged into the sea; those that did not plunge
  3. panicked and quivered and flew into the sky, flew and fell to the earth,
  4. shook out their wings, folded them once more, and perished.

What the poem says

The poet turns to the animals and birds of the grove as Aṉumaṉ wrecks it. The beasts howl with fear; some birds dive into the sea, while others flutter up, fall back to earth, beat their wings and then fold them in death — the shaking of wings being the last sign before dying.

The scene echoes the earlier one in which creatures were thrown into panic when Aṉumaṉ pressed his foot on Mount Makēntiram to leap across the sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kataṟiṉa veruvi, uḷḷam kalaṅkiṉa, vilaṅku; kaṇkaḷ
kutaṟiṉa paṟavai, vēlai kuḷittaṉa, kuḷittilāta
pataṟiṉa; pataitta; vāṉil paṟantaṉa; paṟantu pārvīḻntu
utaṟiṉa ciṟaiyai; mīḷa oṭukkiṉa ulantu pōṉa.