கம்பராமாயணம் 5520 · சுந்தர 7.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குன்று எனக்குவவுத் திண்தோள் - மலை போன்று திரண்ட தோள்களை உடைய; சேடு அகல் பரிதி மார்பன் - அழகினால் பரந்து சூரியன் போன்ற மார்பை உடைய அனுமன்; சீறியும் தீண்டல் தன்னால் - கோபித்த போதும் தன் கைகளால் தொட்ட சிறப்பினால், தெய்வ மரம் தொறும் - அங்கிருந்த தெய்வத் தன்மை வாய்ந்த மரங்களில் எல்லாம்; தோட்டொடும் துதைந்த தம் கூட்டொடும் - இலைகளோடு நெருங்கியனவாய்த் தொகுத்து அமைக்கப் பெற்ற தமது கூடுகளுடன்; புள் துறக்கம் புக்க - பறவைகள் சுவர்க்கம் போய்ச் சேர்ந்தன; மீட்டு அவன் கருணை செய்தால் - இவ்வாறன்றி, அந்த அனுமன் அருள் புரிந்தால்; பெறும் பதம் விளம்பல் ஆமோ ? - அடையக் கூடிய நற்பதவியை நம்மால் சொல்ல முடியுமா ? (முடியாது) மிகப் பெரும் பதவி கிடைக்கும்.
அனுமன் சினத்தால் தீண்டியே, பறவைகளுக்கு சுவர்க்கம் கிடைத்தது. அருள் செய்தால் எவ்வளவு உயர்ந்த பதவி கிடைக்கும் ? என்பது கருத்து. சேடு - அழகு; இளமையும் ஆம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The birds that had built their nests in every divine tree thick with leaves
- went to heaven, nests and all, because the one with massive hill-like shoulders
- and broad chest beautiful as the sun touched them, even in his anger;
- if he should show grace instead, could anyone describe the state one would attain?
What the poem says
The birds of the grove died as Aṉumaṉ tore up their trees, but the poet says they went straight to heaven with their nests, simply because they were touched by Aṉumaṉ's hands.
The point is devotional: if even his angry touch grants heaven, the reward of his grace must be beyond words.