கம்பராமாயணம் 5521 · சுந்தர 7.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொய்ம் முறை அரக்கர் காக்கும் - பொய்யையே தமக்கு நெறியாகக் கொண்ட அரக்கர்கள் காத்து வரும்; புள் உறை புது மென் சோலை - பறவைகள் வசிக்கும் படியான புதிய கண்ணுக்கினிய அந்த அசோகவனச் சோலையில்; விம்முறும் உள்ளத்து அன்னம் - துக்கத்தால் மனம் விம்முறும் அன்னம் போன்ற பிராட்டி; இருக்கும் அவ் விருக்கம் ஒன்றும் - தங்கியிருந்த அந்த மரம் ஒன்று மட்டும்; மும்முறை உலகம் எல்லாம் - மூன்று வகைப்பட்ட உலகம் முழுவதும்; முற்று உற முடிவதான அம்முறை - அழியும் படி முடிவு பெறுகின்ற அந்த ஊழிக் காலத்தில்; ஐயன் வைகும் ஆல் என நின்றது - திருமால் தங்குகின்ற ஆலமரம் போல ஊறுபடாமல் நிற்பதாயிற்று.
மற்றை மரங்கள் எல்லாம் அழிய, பிராட்டி தங்கியிருந்த மரம் மாத்திரம் அழியாமலிருப்பதற்கு - எல்லாம் அழியும் பிரளய காலத்தில் திருமால் பள்ளி கொள்ளும் ஆலமரம் மாத்திரம் நிற்பது உவமை ஆயிற்று. ஊழிக் காலத்தில் எஞ்சியிருக்கும் ஓர் ஆலமரத்தின் ஓர் இலையில் குழந்தை வடிவில் திருமால் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பான் என்பது புராணச் செய்தி. இச்செய்தி முன்னரும் (3683) வந்தது; பின்னும் (5884) வரும். பெருமாள் திருமொழியிலும் (8;7) காண்க. அன்றே: தேற்றப் பொருளுடையது (தெளிவுபடுத்துவது.)
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the fresh, soft grove where birds dwell, guarded by rākṣasas whose way is falsehood,
- that one tree alone, beneath which the swan-like lady sat with sobbing heart,
- stood unharmed like the banyan in which the Lord rests at that time
- when all the three worlds come wholly to their end — ah!
What the poem says
Every tree in the grove is destroyed except one: the tree under which Cītai sits grieving. Aṉumaṉ leaves it untouched.
The poet compares it to the single banyan that survives the cosmic deluge at the end of an age, on one of whose leaves Viṣṇu (Tirumāl) lies as an infant while everything else is dissolved. Since Cītai is the consort of Viṣṇu, the image is especially apt.