கம்பராமாயணம் 5522 · சுந்தர 7.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உறு சுடர்ச் சூடைக் காசுக்கு அரசினை - ஒளி பொருந்திய சூடாமணி என்னும் அரச இரத்தினத்தை, உயிர் ஒப்பானுக்கு அறிகுறியாக விட்டாள் - தன் உயிர் போன்ற நாயகனான இராமபிரானுக்கு, அடையாளப் பொருளாகக் கொடுத்தனுப்பி விட்டாள்; ஆதலான் - ஆகையினால்; அந்தோ வறியள் - ஐயோ, இப்போது ஒரு அணியும் இல்லாது வறியவளாக இருக்கின்றாள் (என்று); அன்று - அப்பொழுது; செறி குழல் சீதைக்கு - அடர்ந்த கூந்தலை உடைய சீதாதேவிக்கு, ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி - தலையில் அணிதற்கு உரிய மற்றொரு சூடாமணியை ஆராய்ந்து எடுத்து; எறிகடல் ஈவது என்ன எழுந்தனன் இரவி என்பான் - அலை எறியும் கடல் கொண்டு வந்து கொடுப்பது போல சூரியன் தோன்றினான்.
சூடைக்காசுக்கரசு, சிகாமணி என்பன ஓரே பொருளன. இது தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. சூரிய குலத்து அரசன் ஒருவனுக்கு வருணனால் பரிசாகக் கொடுக்கப்பட்டது என்றும் அதனைத் தயரதன் மருமகள் சீதைக்கு வழங்கினான் என்றும் கூறுவர் மாமனார் அளித்த சிறப்புடையது ஆதலின், பிற அணிகளை எறிந்ததுபோல் இதனை எறியாமல் பாதுகாத்தாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She had given away the radiant crest-jewel, king of gems,
- as a token for the one who is as her life, and so, alas, she was left with nothing;
- as if, at that moment, the wave-tossed sea had chosen another crest-jewel
- and was bringing it to Cītai of thick tresses, the one called the sun rose up.
What the poem says
Dawn breaks. Cītai had handed her crest-jewel (cūḷāmaṇi) to Aṉumaṉ as a token to carry back to Irāmaṉ, so she now has no ornament left at all.
The poet imagines the sun rising out of the sea as a fresh crest-jewel that the ocean has picked out and lifted up to give her. The jewel was said to be a gift of Varuṇa to a king of the Solar line, passed on by Tacarataṉ to his daughter-in-law; because it came from her father-in-law she had kept it when she threw down her other ornaments.