கம்பராமாயணம் 5523 · சுந்தர 7.46

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தாழ் இரும்பொழில்கள் எல்லாம் துடைத்து - தழைத்த பெரும் சோலை முழுவதையும் அழித்து; ஒரு தமியன் நின்றான் - தன்னந்தனியனாய் நின்ற அனுமன்; ஏழினோடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான் - பதினான்கு உலகங்களையும் (தனது இரண்டு திருவடிகளாலும்) அளந்து கொண்ட திருவிக்கிரம மூர்த்தி என்று சொல்லத்தக்கவனாகவும் இருந்தான்; ஆழியின் நடுவண் நின்ற அருவரைக்கு அரசும் ஒத்தான் - (அதுவன்றிப்) பாற்கடலின் நடுவே (மத்தாக) நின்ற அரிய சிறந்த மலையாகிய மந்தர மலையைப் போலவும் இருந்தான்; (மேலும்); ஊழியின் இறுதிக் காலத்து உருத்திர மூர்த்தி ஒத்தான் - கற்பாந்த காலத்தில் உலகத்தை எல்லாம் அழித்திட்டு நிற்கும் உருத்திர மூர்த்தியைப் போலவும் இருந்தான்.

பெரிய வடிவாலும் அரக்கக் கடலைக் கடையவுள்ளமையாலும் முற்றும் அழித்தமையாலும் திருவிக்கிரமாவதாரம், மந்தரமலை, ஆகியவை உவமையாயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having wiped out all the dense, great groves, he stood there all alone;
  2. he seemed to be the one who measured the seven and seven worlds;
  3. he was like the king of mountains that stood in the midst of the ocean;
  4. he was like Uruttiraṉ at the final hour of the end of an age.

What the poem says

With the whole grove destroyed, Aṉumaṉ stands alone amid the ruin. Three comparisons capture him. His vast size recalls Viṣṇu as Trivikrama, who measured all fourteen worlds with his strides. He is like Mount Mantara, the churning rod set in the Ocean of Milk, because he is about to churn the 'ocean' of rākṣasas. And having destroyed everything, he is like Rudra, who annihilates the universe at the end of an age.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1.tāḻ irum poḻilkaḷ ellām tuṭaittu oru tamiyaṉ niṉṟāṉ,
ēḻiṉoṭu ēḻu nāṭum aḷantavaṉ eṉalum āṉāṉ;
āḻiyiṉ naṭuvaṇ niṉṟa aru varaikku aracum ottāṉ;
ūḻiyiṉ iṟutik kālattu uruttira mūrtti ottāṉ.