கம்பராமாயணம் 5524 · சுந்தர 7.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இன்னன நிகழும்வேலை - இவ்வாறு அசோகவனம் அழிந்து கொண்டிருந்த போது; அரக்கியர் எழுந்து பொங்க - (அங்கு உறங்கிக் கிடந்த) அரக்கிமார்கள் விழித்தெழுந்து மனம் கொதித்து; பொன் மலை என்ன நின்ற புனிதனை புகன்று நோக்கி - பொன்மயமான மேரு மலை போல் நின்ற தூயவனான அனுமனை விருப்பத்தோடு உற்றுப் பார்த்து; அன்னை ஈது என்ன மேனி - அம்மா ! இங்குத் தோன்றுவது என்ன வடிவம் ? யார் கொல் என்று அச்சம் உற்றார் - இவர் யாரோ என்று பயம்கொண்டவராகி, நன்னுதல் தன்னை நோக்கி - அழகிய நெற்றியை உடைய பிராட்டியைப் பார்த்து; நங்கை அறிதியோ என்றார் - “பெண்ணே ! (இவனை இன்னான் என்று) அறிவாயோ” என்று வினாவினார்கள்
அனுமன் திருமேனி பொன் நிறமாதலாலும், மலை போன்ற பெருமை உடைமையாலும், மேருமலை உவமையாயிற்று. இதற்கு முன்பு கடுஞ்சொற்களையே கூறிய அரக்கியர், இப்போது “அன்னை” என்று இன்சொல் இட்டு அழைத்தது அச்சத்தாலும், வியப்பாலும், உண்மை அறியும் நோக்கினாலும் ஆகும். அனுமன் தோற்றம் அச்சமும் வியப்பும் ஊட்டியது; எனினும் உண்மைநிலை அறியவேண்டுமே என்னும் அடிமனத் தூண்டலால் விரும்பி நோக்கினர் 'புகற்சி விருப்பாகும்' என்பது தொல்காப்பியம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- While these things were happening, the rākṣasīs rose up, seething,
- and gazed intently at the pure one standing like a mountain of gold;
- 'Mother! What form is this? Who can it be?' they said, seized with fear;
- and looking at the lady of the fair brow, they said, 'Lady, do you know?'
What the poem says
The noise wakes the rākṣasī guards who had been sleeping around Cītai. They see Aṉumaṉ towering like golden Mount Mēru and are terrified.
Until now these women had spoken only harsh words to Cītai; now, out of fear, wonder and the need to find out the truth, they address her respectfully as 'Mother' and ask whether she knows who this is.