கம்பராமாயணம் 5526 · சுந்தர 7.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்றனள் - என்று, பிராட்டி அரக்கியர்களுக்கு மறுமொழி கூறினாள்; அரக்கிமார்கள் வயிறு அலைத்து இரியல் போகி - அக்காவல் அரக்கியர் வயிற்றில் அடித்துக் கொண்டு நிலை தடுமாறிச் சென்று; குன்றமும், உலகும், வானும் கடல்களும் குலைய ஓட - மலைகளும் இந்தப்பூவுலகும் வானமும் கடல்களும் தடுமாறும்படி ஓடியபோது; தன் தாதை ஒப்பான் - தன் தந்தையாகிய வாயு தேவனை ஒத்த வலிமையுடைய அனுமன்; நின்றது ஓர் சயித்தம் கண்டான் - அங்கு நிலை பெற்று விளங்கிய ஒரு ஓம மண்டபத்தைப் பார்த்து; “இதனை நீக்குவல்” என்னா - “இதை இவ்விடத்தை விட்டுப் பெயர்த்தெறிவேன்” என்று; தன் தட கைகள் - தனது பெரிய கைகளை; நீட்டி பற்றினன் - நீட்டி அதனைப் பற்றிக் கொண்டான்.
சயித்தம் - சைத்தியம் என்னும் வடமொழியின் தமிழ்வடிவம் ஓமம் வேள்வி முதலியன புரியும் மண்டபம். “வானோங்கு சிமயத்து வாலொளி சயித்தம்” (மணிமேகலை 28:131)
ஆங்கிலம் · English translationAI
Translation
- So she spoke; the rākṣasīs beat their bellies and fled in disarray,
- running so that the hills, the earth, the sky and the seas were thrown into turmoil;
- then he saw a shrine-hall standing there and, saying 'I will remove this',
- stretched out his great hands and seized it — he who is like his father.
What the poem says
After Cītai's answer the guards beat their stomachs in panic and run off to raise the alarm. Aṉumaṉ, as strong as his father Vāyu the wind-god, now notices a caityam, a sacred hall for fire-offerings and sacrifices, and grips it to tear it out.
Cayittam is the Tamil form of Sanskrit caitya, a ritual hall or sanctuary.