கம்பராமாயணம் 5527 · சுந்தர 7.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கண் கொள அரிது - (அச்சயித்தம்) எவரும் தம் கண் பார்வை கொண்டு அதன் முழு உருவத்தையும் காண இயலாதது; கார் மீது கொள அரிது - மேகங்களும் எட்டி, அதன் மேற்கொள்ள முடியாத அளவு உயரமானது; திண்கால் எண் கொள அரிது - வலிய காற்றும் பற்றுவதற்கு எண்ணவும் அரியது; இராவும் இருள் கொள அரிது - இராப் பொழுதும் இருளினால் கொள்ள முடியாது; மாக விண்கொள நிவந்த மேரு - பெரிய ஆகாயத்தைத் தனது இடமாகக் கொள்ளும்படி மேலோங்கி எழுந்த மேருமலை கூட; வெதும்பி வெள்கு உற உள்ளம் புண் கொள உயர்ந்தது - வெட்கி, மனம் நொந்து புண் அடையும் படி உயர்ந்து விளங்கியது; இப் பார் பொறைகொள அரிது - இந்தப் பூமியும் அதன் பெருஞ் சுமையைத் தாங்குவது என்பது முடியாத செயல். கார் கொள அரிது - மேக மண்டலத்துக்கும் மேலாக உள்ளது. கால் கொள அரிது - வாயு மண்டலத்துக்கும் மேலானது. இருளாலும் மறைக்க முடியாதது என்பதை இருள்கொள அரிது என்ற தொடர் விளக்கிற்று. போல், ஆம் - அசைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hard for the eye to take in; hard for the clouds to rise above; for the strong wind
- hard even to think of grasping; hard for the night's darkness to cover;
- it rose so high that Mēru, soaring to claim the vast sky, felt shame and burned,
- its heart wounded; it seems too great a weight for this earth to bear.
What the poem says
The poet pauses to describe the hall Aṉumaṉ has seized. No eye can take in all of it; it rises above the clouds and above the region of the winds; it shines so brightly that even night cannot darken it.
Its height puts Mount Mēru, the cosmic mountain, to shame, and it is so massive that the earth itself can scarcely bear it.