கம்பராமாயணம் 5529 · சுந்தர 7.52

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தூண் எலாம் சுடரும் காசு - (அந்தச் சயித்தத்தில் உள்ள) தூண்கள் யாவும் ஒளி விடும் மணிகளால் ஆனவை, சுற்று எலாம் முத்தம் சொன்னம் - அதன் சுற்றுப்பக்கமெல்லாம் (பிரகாரம்) முத்துக்களாலும் பொன்னாலும் இயன்றவை; பிடர் எலாம், பேணல் ஆம் மணியின் பத்தி - அதன் பின் பக்கமெல்லாம் விரும்பத்தக்க இரத்தினங்களின் வரிசையால் இயன்றவை, ஒளிகள் விம்ம - ஒளிகள் மிகுதலால், சேண் எலாம் விரியும் கற்றை சேயொளிச் செல்வதற்கு ஏயும் - ஆகாயம் முழுவதும் பரவுகின்ற தொகுதியான சிவந்த ஒளியையே செல்வமாகக் கொண்ட சூரியனுக்கும் கூட; பூணல் ஆம் - ஆபரணமாக அணிவதற்கு உரியதாம் (ஆதலின்); எம் மனோரால் புகழல் ஆம் பொதுமைத்து அன்று - எம்மைப் போன்றவர்களால், புகழ்ந்து சொல்வதற்குரிய பொதுவான காரியம் அன்று.

சொன்னம் - சொர்ணம்; தங்கம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All its pillars are blazing gems; all its enclosure is pearls and gold;
  2. its walls are of precious jewels, and all its rear swells with light;
  3. it would serve as an ornament even for the lord whose wealth is the red radiance spreading over all the sky;
  4. it is surely no common thing that such as we could praise.

What the poem says

The hall's pillars are made of gleaming gems, its surrounding enclosure of pearls and gold, its walls of rows of precious stones. It shines so brightly that even the sun, whose only wealth is his spreading red light, could wear it as a jewel.

The poet confesses that a structure like this is beyond the praise of ordinary people such as himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tūṇ elām cuṭarum kācu, cuṟṟu elām muttam coṉṉam
pēṇal ām maṇiyiṉ pitti piṭar elām oḷikaḷ vimma
cēṇ elām viriyum kaṟṟaic cēyoḷic celvaṟkēyum
pūṇalām emmaṉōrāl pukaḻalām putumaittu aṉṟē.