கம்பராமாயணம் 5538 · சுந்தர 8.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அருவரை முழையின் முட்டும் அசனியின் இடிப்பும் - பெரிய மலையின் குகையிலே போய்த் தாக்கும் இடியின் முழக்கமும்; ஆழி வெருவரு முழக்கும் - (பிரளயகாலத்தில்) அச்சம் உண்டாகுமாறு தோன்றுகின்ற கடலின் ஒலியும்; ஈசன் வில் இறும் ஒலியும் என்ன - சிவனது வில்லை (இராமபிரான் ஒடித்த போது) ஏற்பட்ட ஒலியும், என்று சொல்லும்படி; குரு மணி மகுடகோடி முடித்தலை குலுங்கும் வண்ணம் - ஒளி பொருந்திய இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற கிரீடங்களை வரிசையாக அணிந்த மயிர் முடியை உடைய பத்துத் தலைகளும் அசையும்படி, எழுந்த அவ் ஓசை - எங்கும் பரந்தெழுந்த அந்தப் பேரோசை; இருபது செவியினூடும் நுழைந்தது - இராவணன் இருபது காதுகளின் வழியே உட் புகுந்து சென்றது.
அனுமன் ஆர்ப்பின் பெருமை இங்குக் கூறப் பெற்றது. அனுமனது பேரொலிக்கு, இடியின் முழக்கம், இராமபிரான் ஒடித்த சிவதனுசின் ஒலி, ஊழிக்காலத்துப் பொங்கும் கடலின் பேரொலி, உவமைகளாயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the crash of a thunderbolt striking in a cave of some great mountain,
- like the terrifying roar of the sea, like the sound of Īcaṉ's bow breaking,
- so that the heads crowned with rows of gleaming jewelled diadems shook,
- that rising roar entered through all twenty of his ears.
What the poem says
A new canto begins: the slaying of the Kiṅkarar, the servant-warriors whom Irāvaṇaṉ sends against Aṉumaṉ.
Aṉumaṉ's roar reaches Irāvaṇaṉ and pierces all twenty of his ears, making his ten crowned heads shake. The poet compares it to thunder striking inside a mountain cave, to the roar of the ocean at the world's end, and to the crack of Śiva's bow when Irāmaṉ broke it to win Cītai.