கம்பராமாயணம் 5539 · சுந்தர 8.2

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

புல்லிய முறுவல் தோன்ற பொறாமையும் சிறிது பொங்க - (இராவணன்) அற்பமான சிறுநகை உண்டாகவும், பொறாமையும் சிறிது மேற் கிளம்பவும்; எல்லை இல் ஆற்றல் மாக்கள் எண் இறந்தாரை ஏவி - அளவற்ற வலிமை பெற்ற ஏவலர்கள் எண்ணிறந்தவர்களை ஏவி அனுப்பி; வானையும் வழியை - ஆகாய வழியையும்; மாற்றி - தடுத்து; குரங்கை - அந்தக் குரங்கை; அகலா வண்ணம் வல்லையில் கொல்லலிர் நொய்தின் பற்றுதிர் கொணர்திர் - தப்பி அப்புறம் செல்லாதபடி, கொல்லாமல் விரைவில், எளிதாக, பிடித்துக் கொண்டு வாருங்கள்; என்றான் - என்று கூறினான்.

இராவணன் பொறாமைக்குக் காரணம், அவனது அந்தப்புரக் கடிகா குரங்கால் அழிக்கப்பட்டது; நொய்து - எளிது; மெதுவாக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With a slight, scornful smile showing and a little resentment welling up,
  2. he dispatched countless servants of boundless strength:
  3. 'Quickly, so that it cannot get away, blocking even the path through the sky,
  4. do not kill it — seize the monkey easily and bring it here!' he said.

What the poem says

Irāvaṇaṉ still treats the matter lightly, smiling with contempt, though he is a little stung that a monkey has wrecked his private pleasure garden. He sends out an enormous force of servant-warriors, the Kiṅkarar.

His orders are to cut off every escape, even through the air, and to capture the monkey alive and bring it to him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pulliya muṟuval tōṉṟap poṟāmaiyum ciṟitu poṅka,
ellai il āṟṟal mākkaḷ eṇ iṟantārai ēvi,
"vallaiyiṉ akalā vaṇṇam, vāṉaiyum vaḻiyai māṟṟi,
kollalir, kuraṅkai noytil paṟṟutir, koṇartir!" eṉṟāṉ.