கம்பராமாயணம் 5540 · சுந்தர 8.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சூலம்... படைக்கலம் பரித்தகையர் - சூலாயுதம், முதலிய பலவகையான போர்க் கருவிகளைத் தாங்கிய கையர்களாகவும்; ஆலமே அனைய மெய்யர் - விஷத்தை ஒத்த கறுத்த உடலை உடையவராகவும் உள்ள அரக்கர்கள்; அகலிடம் அழிவு செய்யும் காலம் - பூமிப்பரப்பு முழுவதையும் அழித்து விடுதலை உடைய பிரளய காலத்தில்; மேல் எழுந்த மூரிக் கடல் என - பொங்கிக் கிளம்பிய வலிய கடல் போல; கடிது செல்வார் - விரைந்து போவாராயினர். அரக்கவீரர்கள், கையில் ஏந்திய ஆயுதங்களின் பெயர்கள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. பரித்தல் - தாங்குதல்; “பரித்த காவினர்” (கம்ப. 708)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Their hands bore weapons — tridents, swords, maces, sharp spears,
- lances, clubs, javelins and the like;
- their bodies were dark as the world-poison; they rushed on swiftly
- like the mighty sea that rises at the time when the wide world is destroyed.
What the poem says
The Kiṅkarar set out. The poet lists the weapons they carry — tridents, swords, pestle-like maces, spears, lances, clubs and javelins — and describes their bodies as black as the poison ālam that rose from the churned ocean.
They surge forward like the ocean that floods the earth at the dissolution of the world.