கம்பராமாயணம் 5541 · சுந்தர 8.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நானிலம் அதனில் போர் உண்டு என நவிலின் - இந்நிலவுலகில் போர் நிகழும் என்று சொன்ன அளவில்; அச்சொல், தேனினும் களிப்பு செய்யும் சிந்தையர் - அந்த வார்த்தை, தேனைவிட மிக்க சுவையை உண்டாக்கும் மனத்தினர்; தெரித்தும் என்னின் - (அன்னவர் தன்மையை) அறிவிப்போம் என்றால்; கானினும் பெரியர் - (நெருக்கம் பரப்பு முதலியவற்றால்) காட்டைவிடப் பெரியவர்; மேனி மலையினும் பெரியர் - உடல் தோற்றத்தில் மலையை விடப் பெரியவர்கள்.
அவ்வரக்கரின் பரப்பு முதலியவற்றிற்கு காடு முதலிய உலகப் பெரும் பொருளே உவமையாகா என்றால், வேறு உவமைப் பொருள்களை எங்கே தேடுவது என்க. பெரியர் என்ற சொல் பல முறை வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி. மாது - ஓ - அசைநிலைகள்
ஆங்கிலம் · English translationAI
Translation
- If anyone said, 'There is a war somewhere on this four-fold earth,' those words
- would delight their minds more than honey; if we are to describe them:
- they were vaster than a forest; in their roar greater than the sea; in fame
- greater than the sky; in body greater than the mountains.
What the poem says
The Kiṅkarar love war: the mere rumour of a battle anywhere on earth tastes sweeter to them than honey.
The poet measures them against the largest things in the world and finds those too small: their host is denser than a forest, their roar louder than the sea, their fame wider than the sky, their bodies bigger than mountains. Repeating 'greater' in each clause is a deliberate rhetorical figure.