கம்பராமாயணம் 5543 · சுந்தர 8.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கட்டிய வாளர் - இடையில் கட்டிய வாளாயுதத்தை உடையவர்கள்; இட்ட கவசத்தர் கழலர் - பூண்ட கவசத்தையும் வீரக் கழல்களையும் உடையவர்கள்; திக்கைத் தட்டிய தோளர் - திக்குகளின் எல்லையை முட்டிய தோள்களை உடையவர்கள்; மேகம் தடவிய கையர் - மேகங்களைத் தடவும்படி நீண்ட கைகளை உடையவர்கள்; வானை எட்டிய முடியர் - வான மண்டலத்தை எட்டித் தொட்ட தலையை உடையவர்கள்; தாளால் இடறிய பொருப்பர் - தம் கால்களால் இடறியெறியும் மலைகளை உடையவர்கள். (மலைகளைக் காலால் இடறித் தள்ளுபவர்); ஈட்டி கொட்டிய பேரி என்ன மழை என குமுறும் சொல்லார் - ஒருங்கே சேர்த்து முழக்கப்பட்ட பேரிகை போலவும், மேகத்தின் இடி போலவும் முழங்குகின்ற சொற்களை உடையவர்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Swords girded on, armour donned, warrior anklets on their legs,
- shoulders that struck the edges of the directions, hands that brushed the clouds,
- heads that reached the sky, hills they kicked aside with their feet,
- and voices that rumbled like massed war-drums beaten together, like thunder-clouds.
What the poem says
A portrait of the Kiṅkarar as they advance: armed with swords, armour and the anklets worn by warriors, they are so huge that their shoulders bump against the horizons, their hands brush the clouds and their heads touch the sky.
They kick mountains out of their path as they go, and their voices boom like rows of kettle-drums or thunder.