கம்பராமாயணம் 5544 · சுந்தர 8.7

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வானவர் எறிந்த தெய்வ அடுபடை வடுக்கள், மற்றைத்
தானவர் துரந்த ஏதித் தழும்பொடு தயங்கும் தோளர்;
யானையும் பிடியும் வாரி இடும் கயவாயர்; ஈன்ற
கூனல் வெண்பிறையில் தோன்றும் எயிற்றினர்; கொதிக்கும்கண்ணர்.

பொருள் · Meaning in Tamil

வானவர் எறிந்த தெய்வ அடுபடை வடுக்கள் - தேவர்கள் தம் மீது வீசி எறிந்த தெய்வத்தன்மை உள்ள, கொல்ல வல்ல ஆயுதங்களால் உண்டான தழும்புகள்; மற்றை தானவர் துரந்த ஏதி தழும்பொடு தயங்கும் தோளர் - தேவரின் வேறான அசுரர்கள் போரில் தூண்டிய ஆயுதங்களால் உண்டான தழும்புகளோடு விளங்குகின்ற தோள்களை உடையவர்கள்; யானையும் பிடியும் வாரி இடும் பில வாயர் - ஆண் யானையையும் பெண்யானையையும் வாரி உண்ணுகின்ற குகை போன்ற வாயினை உடையவர்கள்; ஈன்ற கூனல் வெண் பிறையின் தோன்றும் எயிற்றினர் - புதிதாகத் தோன்றிய வளைந்த வெண்மையான பிறைச் சந்திரன் போன்று காணப்படுகின்ற பற்களை உடையவர்கள்; கொதிக்கும் கண்ணர் - கோபத்தால் பொங்கும் கண்களை உடையவர்கள்.

ஏதி - ஆயுதம்; எயிறு - பல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Their shoulders gleamed with the scars of the divine killing weapons the gods had hurled
  2. and with the weals left by the arms that the other foes, the dānavas, had driven at them;
  3. their cavernous mouths scooped up bull-elephants and cow-elephants alike;
  4. their tusks looked like the newborn curved white crescent moon; their eyes blazed.

What the poem says

The description of the Kiṅkarar continues. Their shoulders carry the scars of old wars against both gods and asuras, proof of long experience in battle.

Their mouths are like caves that can swallow elephants whole, their fangs curve like a new crescent moon, and their eyes boil with anger.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉavar eṟinta teyva aṭu paṭai vaṭukkaḷ, maṟṟait
tāṉavar turanta ētit taḻumpoṭu tayaṅkum tōḷar;
yāṉaiyum piṭiyum vāri iṭum pila vāyar; īṉṟa
kūṉal veṇpiṟaiyil tōṉṟum eyiṟṟiṉar; kotikkum kaṇṇar.