கம்பராமாயணம் 5548 · சுந்தர 8.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பனிஉறு சோலை சிந்தி - குளிர்ச்சி பொருந்திய அசோகவனச் சோலையை அழித்து; வேரமும் பறித்தது - அங்கிருந்த சயித்த மண்டபத்தையும் அடியோடு பெயர்த்து அழித்தது; தனி ஒரு குரங்கு போலாம் - தனியாய் வந்த ஒரு குரங்கு என்றால்; நன்று நம்தருக்கு என்கின்றார் - நம் வலிமை நன்றாயிருந்தது என்று சொல்கின்றவர்களாய், இதனின் மற்று ஒரு பழி இனி உண்டோ - இதைவிட வேறொரு அவமானம் அரக்கர் குலத்துக்கு இன்னும் உள்ளதோ ?; என்று இரைத்து - என்று ஆரவாரம் செய்து; பொங்கி - கொதித்து; முனிவுறு மனத்தின் தாவி முந்துற முடுகுகின்றார் - கோபம் கொண்ட மனத்தோடு முற்பட விரைந்து செல்பவரானார்கள்.
வேரமும்; உம்மை, உயர்வு சிறப்பு. குரங்கு போலாம் என்பது இழிவுப் பொருளில் ஒப்பில் போலியாக வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'It wrecked the cool grove and tore out the shrine as well — ah!
- and a lone monkey, it seems! Fine indeed is our might!' they said;
- 'Could there be any disgrace greater than this?' they cried, seething,
- and bounding on with angry hearts they raced to be first.
What the poem says
The Kiṅkarar mutter among themselves as they go. A single monkey has smashed the grove and even torn out the sacred hall — a fine testimony to rākṣasa valour!
They feel it as the worst possible disgrace to their race, and in their fury each tries to outrun the others to reach Aṉumaṉ first.