கம்பராமாயணம் 5549 · சுந்தர 8.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எற்று உறு முரசும் - தாக்கி அடிக்கப்படுகின்ற முரசத்தின் ஓசையும்; வில் நாண் ஏறவிட்டு எடுத்த ஆர்ப்பும் - வில்லிலே நாணை ஏற்றிப் பூட்டி (அதனைத் தட்டி) எழுப்பிய ஒலியும், சுற்றுறு கழலும் - காலில் சுற்றிக் கட்டிய வீரக்கழல்களின் ஒலியும்; சங்கும் - சங்குகளை முழக்கும் ஒலியும்; தெழி தெழித்து உரப்பும் சொல்லும் - இரைச்சலிட்டு அதட்டுகின்ற சொல் முழக்கமும்; உடன்று ஒன்றாய் உற்று ஓங்கி எழுந்து - (ஆகிய ஒலிகளெல்லாம்) மாறுபட்டு பின்பு ஒன்றாகச் சேர்ந்து மிகப் பேரொலியாகக் கிளம்பி; ஊழிப் பேர்வில் - யுகங்கள் முடிந்து மாறுங்காலத்தில்; நல்திரை கடல்களோடு மழைகளை நா அடக்க - பெரிய அலைகளோடு எழும் கடல்களின் கொந்தளிப்போடு, அப்போது உண்டாகும் மழைகளின் ஒலியையும் அடக்கும்படி (மிகுந்து விளங்க).
முரசு, கழல் சங்கு, நாண் என்பவை தானி ஆகு பெயராய் நின்று, அவற்றினின்று எழுந்த ஒலிகளைக் குறிப்பன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The pounding of war-drums, the twang raised from bowstrings drawn taut,
- the clank of anklets bound round their legs, the conches, the roaring shouts of threat,
- clashed and then merged into one, swelling and rising up
- to silence the great-waved seas and the rain-clouds at the turning of the ages.
What the poem says
A medley of battle sounds rises from the Kiṅkarar: drums being beaten, bowstrings being strung and plucked, the jingling of warriors' anklets, conches being blown, and shouted threats.
At first separate, these noises combine into one roar so loud that it drowns out even the storm-tossed oceans and the thundering rains of the deluge at the end of an age.