கம்பராமாயணம் 5550 · சுந்தர 8.13

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தெரு இடம் இல் என்று எண்ணி - தெருவில் நடப்பதற்குப் போதுமான இடம் இல்லை என்று கருதி; வானிடைச் செல்கின்றாரும் - ஆகாய வழியாகச் செல்கின்றவர்களும்; புருவமும் சிலையும் கோட்டி - தம் புருவங்களையும் விற்களையும் வளைத்து; புகை உயிர்த்து உயிர்க்கின்றாரும் - (கோபத்தீயால்) புகையை வெளிப்படுத்தி பெருமூச்சு விடுகின்றவர்களும்; ஒருவரின் ஒருவர் முந்தி முறை மறுத்து உருக்கின்றாரும் - ஒருவரை ஒருவர் முன்னிட்டு, முறை தவறியதனால் (தவறியவர் மீது) கோபம் கொள்கின்றவர்களும்; இலங்கை விரிவு இலது என்று - இலங்கைநகர் வீரர்கள் செல்வதற்கு ஏற்ற பரப்பு உடையதன்று என்ற காரணத்தால்; வழிபெறார் விழிக்கின்றாரும் - தாம் செல்லும் வழியைப் பெறாதவர்களாய், இன்னது செய்வது என்று அறியாமல் மருண்டு விழித்துக் கொண்டிருக்கின்றவர்களும்.

புருவம் கோட்டுதல், சினத்தில் தோன்றும் மெய்ப்பாடு. சிலம் - அரங்கேற்று காதை. வெகுண்டோன் அவிநயம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some, thinking there was no room in the streets, went by way of the sky;
  2. some bent their brows and their bows and breathed out smoke;
  3. some, pushing ahead of one another and breaking rank, flared up in anger;
  4. some, finding no way through, cried out, 'Ilaṅkai is too narrow!'

What the poem says

The streets of Ilaṅkai cannot hold the host. Some warriors take to the air; others frown, bend their bows and snort smoke in their rage; others quarrel with those who jump the queue.

Still others, unable to get through at all, stand there bewildered, complaining that the city is too small. Knitting the brows is a conventional bodily sign of anger in Tamil poetics.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1teru iṭam il eṉṟu eṇṇi vāṉiṭaic celkiṉṟārum,
puruvamum cilaiyum kōṭṭip pukai uyirttu uyirkkiṉṟārum,
oruvariṉ oruvar munti muṟai maṟuttu urukkiṉṟārum,
virivu ilatu ilaṅkai'eṉṟu vaḻi peṟār viḷikkiṉṟārum.