கம்பராமாயணம் 5552 · சுந்தர 8.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அனைவரும் மலை என நின்றார் - கிங்கர வீரர் யாவரும், மலையைப் போல சலியாது நிற்பவர்கள்; அளவு அறுபடைகள் பயின்றார் - மிகப் பல படைக்கலப் பயிற்சி பெற்றவர்கள்; அனைவரும் அமரின் உயர்ந்தார் - யாவரும் போர் செய்வதில் சிறந்தவர்கள்; அனைவரும் வரனின் அமைந்தார் - யாவரும் வர பலம் பொருந்தப் பெற்றவர்கள்; அசனியின் அணிகள் அணிந்தார் - வச்சிராயுதம் போல் ஒளி வீசும் ஆபரணங்களை அணிந்தவர்கள்; அனைவரும் அமரரை வென்றார் - யாவரும் தேவர்களைப் போரில் வென்றவர்கள்; அசுரரை உயிரை அயின்றார் - அசுரர்களது உயிரைக் கொன்று தின்றவர்கள் (இத்தகையவர்கள்); அகலிடம் நெளிய நடந்தார் - (பாரமிகுதியால்) பூமி நெளியும்படி, (அனுமான் உள்ள இடம் நோக்கி) நடந்தார்கள்.
அரக்க வீரர் ஒவ்வொருவரும், மலை என நிற்றல் முதலியன பெற்றவராகையால், அனைவரும் என்பது பன்முறை கூறப்பட்டது. இந்தக் கிங்கர வீரர் தேவர்களையும் மற்ற அசுரர்களையும் வென்ற செய்தி 5493, 5495 ஆம் பாடல்களில் குறிக்கப்பட்டது. அசனி - வச்சிராயுதம். “அசனி வச்சிரப்படையாகுமே” - பிங்கலந்தை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All of them stood like mountains; they were trained in countless weapons;
- all of them were supreme in war; they marched so that the wide earth buckled;
- all of them were armed with boons; they wore ornaments bright as the thunderbolt;
- all of them had conquered the gods; they had devoured the lives of asuras.
What the poem says
The metre changes, and the poet sums up the Kiṅkarar in a verse that begins every line with 'all of them' (aṉaivarum), stressing that each single warrior had all these qualities.
They are immovable as mountains, masters of every weapon, protected by divine boons, glittering with jewels like Indra's thunderbolt, victors over the gods and killers of asuras — and their tread makes the earth sag.