கம்பராமாயணம் 5553 · சுந்தர 8.16

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குறுகின கவசரும் - உடலுடன் நெருங்கி ஒட்டிய கவசங்கள் கொண்ட நிவாதகவசர் என்னும் அசுரரும்; மின்போல் குரை கழல் உரகரும் - மின்னல் போல ஒளி வீசுவனவும் ஒலிக்கின்றவையுமான வீரக் கழல்கள் அணிந்த நாகர்களும்; வன்போர் முறுகின பொழுதில் - (இந்தக் கிங்கரர்களை எதிர்த்து) வலிய போர் முற்றியபோது; உடைந்தார் முதுகிட - தோற்றவர்களாய்ப் புறமுதுகிட்டு ஓடியதால்; முறுவல் பயின்றார் - (அவர்களின் வீரமின்மையை எள்ளிப்) புன்முறுவல் கொண்டனர் இந்தக் கிங்கரர்; இறுகின நிதி கிழவன் - செறிந்த செல்வங்களுக்கு உரியவனாகிய குபேரனின்; இசை கெட - புகழ் அழியும்படி; அளகை எறிந்தார் - அளகாபுரியைத் தாக்கி (இக் கிங்கரர்) அழித்தனர்; தெறுகுனர் இன்மையின் - தங்களை எதிர்த்துப் போர் செய்வோர் வேறு எவரும் இல்லாமையால்; வன்தோள் தினவு உற - வலிமையான தோள்கள் தினவு எடுக்கும்படி, உலகு திரிந்தார் - (எதிர்த்துப் போர் செய்வார் கிடைப்பரோ எனத் தேடி) உலகெங்கும் திரிந்தனர்.

கிங்கரரின் போர் ஆற்றலையும் ஆர்வத்தையும் பாடல் புலப்படுத்துகிறது. குறுகின கவசர் என்பார் நிவாதகவசர் எனப்படும் ஓர் அசுர இனத்தவராவர் இராவணன் மேற்கொண்ட திக்குவிசயத்தில் அவனை எதிர்த்துப் போரிட்டனர்: ஆற்றலில் இருவரும் சமநிலையராயிருத்தல் கண்டு நான்முகன் இரு சாராரையும் சமாதானப்படுத்தினன் என்பர் வால்மீகி. முதல் நூற் செய்தியை ஒதுக்கி நிவாதகவசரை இலங்கை அரக்கர் வென்றதாகவே கம்பர் குறிக்கிறார். 'குறுகின கவசரும்.... உரகரும்..... முதுகிட' என்ற கம்பர் வாக்கைக் கருதுக. போர் செய்யும் வாய்ப்புக் கிடைக்காதபோது வீரர்களின் தோள் தினவெடுக்கும் என்பது மரபுவழிச் செய்தி. கம்பர் முன்னரும் (179, 1280, 2937) குறித்துள்ளார். 'தெறுகுநர்' என இருக்க வேண்டும்; எதுகை நலம் நாடித் 'தெறுகுனர்' என நின்றது. 'நிதிக் கிழவன்' ஓசை நோக்கி 'நிதிகிழவன்' என நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the Close-Armoured ones and the Nāgas with lightning-bright ringing anklets,
  2. as fierce battle reached its height, broke and turned their backs, these warriors smiled in scorn;
  3. they stormed Aḷakai so that the great fame of the lord of hoarded wealth was ruined;
  4. and finding none left to fight them, they roamed the world, their strong shoulders itching.

What the poem says

The Kiṅkarar's past exploits: the Nivātakavacas, an asura race whose name means 'close-armoured', and the serpent-people fled from them, and they laughed at their cowardice. They sacked Aḷakai, the city of Kubera, lord of wealth.

With no enemies left, their shoulders itched for battle — a traditional image of warriors denied a fight — and they wandered the earth looking for someone to fight. In Vālmīki the Nivātakavacas fought Irāvaṇaṉ to a draw; Kampaṉ makes them simply defeated.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṟukiṉa kavacarum miṉpōl kurai kaḻal urakarum, vaṉ pōr
muṟukiṉa poḻutiṉ, uṭaintār mutuku iṭa, muṟuval payiṉṟār;
iṟukiṉa nitikiḻavaṉ pēr icai keṭa aḷakai eṟintār;
teṟukunar iṉmaiyiṉ val tōḷ tiṉavuṟa ulaku tirintār.