கம்பராமாயணம் 5554 · சுந்தர 8.17

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வரைகளை இடறுமின் என்றால் - மலைகளை இடறித் தள்ளுங்கள் என்றாலும்; மறிகடல் பருகுமின் என்றால் - அலை புரளுகின்ற கடல் நீரைக் குடித்து விடுங்கள் என்றாலும்; இரவியை விழ விடும் என்றால் - சூரியனைக் கீழே விழும்படி தள்ளிவிடுங்கள் என்றாலும்; எழு மழை பிழியுமின் என்றால் - வானத்தில் செல்லுகின்ற மேகத்தைப் பிழிந்து விடுங்கள் என்றாலும்; அரவினது அரசனை தரையினொடு அரையுமின் என்றால் - பாம்பரசனாகிய ஆதி சேடனை, தரையோடு சேர்த்து அரைத்து விடுங்கள் என்றாலும்; தரையினை எடும் எடும் என்றால் - இந்தப் பூமியைப் பெயர்த்து எடுத்து விடுங்கள் என்றாலும்; ஒருவர் அது அமைதல் சமைந்தார் ஒன்றோ - ஒருவரே, அத் தொழிலைச் செய்து முடிக்கத்தக்கவராவர். (இவர்கள் வல்லமை) இவ்வளவு மாத்திரமேயோ ? இவர்களது வல்லமை இத்தோடு அடங்காது என்றபடி.

இயற்கையின் இயல்புகளை மாற்றுவதற்கு, அரக்க வீரர்களுள் ஒருவரே போதும் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Told 'Kick the mountains aside!', told 'Drink up the rolling sea!',
  2. told 'Make the sun fall!', told 'Wring out the rising clouds!',
  3. told 'Grind the king of serpents into the ground!' — and is that all? —
  4. told 'Lift the earth, lift it!', any single one of them was ready to do it.

What the poem says

The poet lists impossible tasks: kicking away mountains, drinking the ocean dry, knocking the sun out of the sky, squeezing the clouds dry, crushing Ātiśēṣaṉ, the serpent who holds up the world, or lifting the earth itself.

Any one of these warriors alone could do any of them, and their strength does not stop even there.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'varaikaḷai iṭaṟumiṉ!'eṉṟāl, 'maṟikaṭal parukumiṉ!'eṉṟāl,
'iraviyai viḻaviṭum!'eṉṟāl, 'eḻu maḻai piḻiyumiṉ!'eṉṟāl,
'araviṉatu aracaṉai, oṉṟō, taraiyiṉoṭu araiyumiṉ!'eṉṟāl,
'taraiyiṉai eṭum, eṭum!'eṉṟāl, oruvar atu amaital camaintār.