கம்பராமாயணம் 5555 · சுந்தர 8.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தூளியின் நிமிர்படலம் போய் - (வீரர்கள் செல்வதால்) எழுந்த புழுதியின் தொகுதி மேலே சென்று; இமையவர் விழி துற - தேவர்களின் கண்களைத் தூர்த்துவிட; வெம் போர் மீளியின் இனம் என - கொடிய போர் செய்யவல்ல பேய்களின் கூட்டம் என்னும் படியாகவும்; வன் தாள் விரை புலி நிரை என - வலிய கால்களால் விரைந்து செல்லும் புலிக் கூட்டங்கள் என்னும்படியாகவும்; விண்தோய் ஆளியின் அணி என - வானத்தில் பாய்ந்து செல்லும் சிங்கங்களின் கூட்டம் என்னும்படியாகவும்; அன்றேல், அலை கடல் விடம் என - அல்லாவிடில், கடலினின்றும் தோன்றிய ஆலகாலநஞ்சு என்னும்படியாகவும்; அஞ்சார், வாளியின் விசை கொடு திண்கார்வரை வருவன வந்தார் - பயப்படாமல், அம்பின் வேகத்தோடு வலிய மேகங்கள் மலையை நோக்கி வருவன போல, (அனுமனை நோக்கி) வந்தார்கள்.
இமையவர் விழிதுற வந்தார் என இயையும். படலம் - தொகுதி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the cloud of dust they raised went up and clogged the eyes of the gods,
- like a horde of fierce war-demons, like a pack of tigers racing on strong legs,
- like a troop of yāḷis leaping in the sky, or else like the poison of the wave-tossed sea,
- fearless, with the speed of arrows, they came on like strong dark clouds rushing upon a mountain.
What the poem says
The Kiṅkarar charge towards Aṉumaṉ. The dust kicked up by their feet rises so high that it fills the eyes of the gods watching from above.
They are likened to a band of battle-demons, a pack of tigers, a troop of yāḷis (mythical lion-like beasts) bounding through the sky, and the deadly poison that rose from the churned sea. Aṉumaṉ, standing firm, is the mountain toward which these storm-clouds race.