கம்பராமாயணம் 5556 · சுந்தர 8.19

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொறி தர விழி, உயிர் ஒன்றோ? புகை உக, அயில் ஒளி, மின் போல்,
செறிதர, உரும் அதிர்கின்றார், திசைதொறும் விசைகொடு சென்றார்,
எறிதரு கடையுக வன்கால் இடறிட, உடுவின் இனம்போய்
மறிதர, மழை அகல் விண்போல் வடிவு அழி பொழிலை, வளைந்தார்.

பொருள் · Meaning in Tamil

ஒன்றோ - (அவ்வீரர்களின்) பெரு மூச்சுக் காற்று மாத்திரமோ ?; விழி பொறிதர - கண்களினின்று நெருப்புப் பொறி பரக்கவும்; புகை உக - புகையை வெளியே கக்கவும்; அயில் ஒளி மின் போல் செறிதர - வேலாயுதங்களின் ஒளி மின்னலைப் போல் நெருங்கவும்; உரும் அதிர்கின்றார் - இடி போல் முழங்குகின்றவர்களாய்; திசை தொறும் விசைகொடு சென்றார் - எட்டுத் திக்குகளிலும் விரைந்து சென்றவர்களாய், கடை யுகம் எறிதருவன்கால் இடறிட - கொடிய பெருங்காற்று எற்றி வீசுதலால்; உடுவின் இனம் போய் மறிதர - நட்சத்திரக் கூட்டங்கள் நீங்கி விழுந்து விடவும்; மழை அகல் விண் போல் - மேகம் இல்லாத ஆகாயம் போல; வடிவு அழி பொழிலை - தன்னுருவம் அழிந்த அசோகவனத்தை; வளைந்தார் - சூழ்ந்து கொண்டார்.

பொறிதர, புகைஉக, தெறிதர அதிர்கின்றார் சென்றார் வளைந்தார் எனச் சொல் முடிவு கொள்க. உடுவினம், மலர்களுக்கும், மழை நீங்கிய விண், உருவழிந்த அசோக வனத்துக்கும் உவமை. முன் இரண்டடிகள் கிங்கரர் சென்றமையையும், பின் இரண்டடிகள் பொழிலின் நிலைமையையும் கூறும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With sparks flying from their eyes — and was it only their breath? — smoke pouring forth, the gleam of their spears
  2. flashing like lightning, they thundered and rushed with speed in every direction;
  3. and like a sky emptied of cloud, from which the hosts of stars have fallen away,
  4. kicked loose by the fierce wind of the age's end, was the ruined grove that they encircled.

What the poem says

The first half of the verse shows the Kiṅkarar: eyes shooting sparks, smoke coming not only from their breath, spears glinting like lightning, roaring like thunder as they spread out on all sides.

The second half shows the grove they surround. Stripped of its trees and scattered with fallen flowers, it looks like a sky swept clean of clouds by the wind at the end of an age, with its stars knocked down — the flowers being the stars.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṟi tara viḻi, uyir oṉṟō? pukai uka, ayil oḷi, miṉ pōl,
teṟi tara, urum atirkiṉṟār, ticaitoṟum vicaikoṭu ceṉṟār,
eṟitaru kaṭaiyuka vaṉ kāl iṭaṟiṭa, uṭuviṉ iṉam pōy
maṟitara, maḻai akal viṇpōl vaṭivu aḻi poḻilai, vaḷaintār.