கம்பராமாயணம் 5557 · சுந்தர 8.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெயில் விரிகதிரவனும் போய் வெருவிட - வெயிலை வீசுகின்ற சூரியனும் அஞ்சி விலகிப் போய்விட; விண் தோய் கயிலையின் மலை என - ஆகாயத்தை எட்டிய கயிலை மலை போல, வெளியிடை நின்றான் - திறந்த வெளியிடத்தில் நின்றவனாகிய அனுமன்; வயிர் ஒலி வளை ஒலி - ஊது கொம்பின் ஓசையும் சங்கின் ஓசையும்; வல் கார் மழை ஒலி - வலிய கார் காலத்து மேக ஒலி போன்ற, முரசு ஒலி - முரசங்களின் முழக்கமும்; மண்பால் உயிர் - பூமியில் உள்ள பிராணிகள்; உலைவுற - நடுக்கம் அடைய; நிமிரும் போர் உறும் ஒலி - ஓங்கும் போர் வருவதைக் குறிக்கும் ஒலியும்; செவியின் உணர்ந்தான் - காதினால் கேட்டு உணர்ந்தவனாகி; அனையவர் வரு தொழில் கண்டான் - அந்த அரக்கர் வருவதைக் கண்ணால் நேரிலும் கண்டான்.
வெயில் விரி கதிரவன் வெருவியது; அனுமன் சிறு குழந்தையாக இருந்த போது, தன்னைப் பற்ற வந்ததை எண்ணி மீண்டும் வருவானோ என்ற நினைவு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The blare of horns, the call of conches, war-drums booming like strong monsoon clouds,
- and the rising din of battle that sets all life on earth trembling — he took them in with his ears;
- while even the sun that spreads its rays drew away in fear, he stood in the open like Mount Kailāsa touching the sky,
- and he saw those warriors coming on.
What the poem says
Aṉumaṉ hears the horns, conches and drums of the approaching army and sees the warriors advancing. He stands in the open, huge and white-gleaming like Mount Kailāsa.
The sun shrinks back in fear at the sight of him: when Aṉumaṉ was a baby he leapt at the sun, taking it for a fruit, and the sun is imagined as worried he might try again.