கம்பராமாயணம் 5559 · சுந்தர 8.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பவனனின் முடுகி நடந்தார் - காற்றை விட விரைவாக நடந்து வந்த அரக்கர்கள்; பகல் இரவு உற மிடைகின்றார் - பகற்காலத்திலேயே இரவு போல இருளாகும் படி நெருங்கி, இவன் இவன் இவன் என நின்றார் - இவன்தான் இவன்தான் இவன் என்று குறிப்பித்துக் காட்டுபவர்களாய், இது என முதலி எதிர்ந்தார் - இதுவே அந்தக் குரங்கு என்று சொல்லி, முற்பட்டு எதிர்ப்பவர்களாக; புவனியும் மலையும் விசும்பும் பொருவரு நகரும் - பூமியும் மலையும், ஆகாயமும், ஒப்பில்லாத இலங்கை நகரமும்; உடன் போர்த் துவனியில் அதிர - ஒரு சேரப் போர் முழக்கத்தினால் நடுங்கும் படியாக, விடம் போல் சுடர் விடு படைகள் துரந்தார் - ஆலகாலம் போல் கொடுமையை உடைய ஒளி விடுகின்ற ஆயுதங்களை (அனுமன் மேல்) வீசினார்கள்
முடுகி நடந்தார் துரந்தார் என முடிந்தது. இவன் இவன் இவன் என்ற அடுக்கு, விரைவுப் பொருளையும் வெகுளிப் பொருளையும் தருவது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'This one! This one! This one!' they cried, standing there; 'It's this!' they said and pressed forward to confront him;
- they rushed on faster than the wind, crowding so thick that day turned into night;
- and as the earth, the mountains, the sky and the peerless city shook together
- with the din of battle, they hurled weapons that blazed like poison.
What the poem says
The rākṣasas reach Aṉumaṉ, pointing and shouting 'That's him! That's him!' — the repetition conveys both their haste and their anger.
So many of them press in that the daylight is blotted out. With a roar that shakes earth, hills, sky and city, they hurl their gleaming, deadly weapons at him.