கம்பராமாயணம் 5560 · சுந்தர 8.23

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மழைகளும், மறி கடலும் போய் மதம் அற முரசம் அறைந்தார்,
முழைகளின் இதழ்கள் திறந்தார், முதிர் புகை கதுவ முனிந்தார்,
பிழை இல பட அரவின் தோள் பிடர் உற அடி இடுகின்றார்,
கழை தொடர் வனம் எரி உண்டால் என, எறி படைஞர் கலந்தார்.

பொருள் · Meaning in Tamil

எறி படைஞர் - ஆயுதங்களை வீசத் தொடங்கிய அந்த அரக்கவீரர்கள்; மழைகளும், மறிகடலும் போய் மதம் அற முரசம் அறைந்தார் - (இடிக்கின்ற) மேகங்களும் (ஒலிக்கின்ற) அலைகள் மடங்குகின்ற கடல்களும் ஒதுங்கி, செருக்கு அற்றுவிடும்படியாக போர் முரசங்களை அடித்து முழக்கினவர்களாய்; முழைகளின் இதழ்கள் திறந்தார் - குகைகள் போல வாயிதழ்களைத் திறந்தவர்களாய்; முது புகைகதுவ முனிந்தார் - மிக்க புகை, கம்மிக் கொள்ளும்படி பெருஞ்சினம் கொண்டவர்களாய்; பிழை இல பட அரவின் தோள் பிடர் உற அடி இடுகின்றார் - குற்றமற்ற படங்களை உடைய ஆதிசேடனின் தோளும் பிடரும் அழுந்தும்படி நடப்பவர்களாய்; கழை தொடர் வனம், எரி உண்டால் என கலந்தார் - மூங்கில்கள் அடர்ந்த காட்டினை நெருப்புப் பற்றுவது போல, (நாலாபக்கமும் வளைத்துக் கொண்டு) ஒருங்கு திரண்டார்கள். அரவுக்குப் பிழை இன்மையாவது, உலகின் கீழிருந்து அப்பாரத்தைச் சுமத்தலில் பின்வாங்காதிருத்தலாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They beat their war-drums till the clouds and the rolling sea lost their pride;
  2. they opened lips like the mouths of caves; they raged until thick smoke rose about them;
  3. they trod so heavily that the shoulders and neck of the faultless hooded serpent were pressed down;
  4. and the weapon-hurling warriors closed in, like fire taking hold of a forest of bamboo.

What the poem says

The attackers beat their drums louder than thunder or the ocean, gape with cave-like mouths, and fume with anger. Their tread is so heavy that it presses down on Ātiśēṣaṉ, the serpent who supports the world from below; his being 'faultless' means he never shrinks from that burden.

They close round Aṉumaṉ from every side the way a fire spreads through a dense bamboo forest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maḻaikaḷum, maṟi kaṭalum pōy matam aṟa muracam aṟaintār,
muḻaikaḷiṉ itaḻkaḷ tiṟantār, mutu pukai katuva muṉintār,
piḻai ila paṭa araviṉ tōḷ piṭar uṟa aṭi iṭukiṉṟār,
kaḻai toṭar vaṉam eriyuṇṭāleṉa, eṟi paṭaiñar kalantār.