கம்பராமாயணம் 5561 · சுந்தர 8.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அறவனும் - அறவடிவினனான அந்த அனுமனும், அதனை அறிந்தான் - அரக்கர்கள் நெருங்கி வந்து படைகள் வீசுவதை அறிந்து; அருகினில் அழகின் அமைந்தார் - தனது பக்கத்தில் சிறப்பாக வந்து பொருந்திய அரக்கர்கள்; இற, இனின் உதவு நெடுந்தார் உயர் மரம் ஒரு கை இயைந்தான் - இறப்பதற்கு, இனிமையாக உதவக் கூடிய நீண்ட ஒழுங்கான மேன்மையுற்ற மரம் ஒன்றைத் தனது கையில் எடுத்தான்; உற வரு துணை என அன்றோ - மனத்திற்கு ஏற்ப உதவி செய்ய வருகின்ற ஒரு துணைவனைப் போல அல்லவா இது உள்ளது என்று; உதவிய அதனை உவந்தான் - தக்க சமயத்தில் உதவுமாறு கிடைத்த அம்மரத்தை விரும்பிக் கொண்டவனாய்; நிறை கடல் கடையும் நெடுந்தாள் மலை என நடுவண் நிமிர்ந்தான் - பால் நிறைந்த கடலைக் கடைதற்குரிய பெரிய அடியை உடைய மந்தர மலையைப் போல அரக்கர் நடுவில் ஓங்கி எழுந்தான். அரக்கர் கடலைக் கலக்கப் போவதால் மந்தர மலை அனுமனுக்கு உவமை ஆயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The righteous one understood it; and he took in one hand a tall tree,
- fine and straight and lofty, that would serve sweetly to bring death to those who had gathered near;
- rejoicing in it as in a friend who comes to help just when needed,
- he rose up in their midst like the long-rooted mountain that churns the brimming sea.
What the poem says
Aṉumaṉ sees the attack coming and picks up a tall, straight tree, the perfect weapon for dispatching the rākṣasas around him. He welcomes it like a friend who turns up at the right moment.
Standing tall in the middle of the host, he is compared to Mount Mantara, the mountain used to churn the Ocean of Milk, because he is about to churn the sea of rākṣasas.