கம்பராமாயணம் 5562 · சுந்தர 8.25

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரு வரை நெரியவிழும் பேர் அசனியும் அசைய அறைந்தான் - (அனுமன்) பெரிய மலைகள் நெரிந்து தூளாகுமாறு, விழுகின்ற பெரிய இடிகளும், அவ்வோசையில் குலைந்து போக, அம் மரத்தைக் கொண்டு அரக்கர்களை ஓங்கி அடித்தான்; (அதனால்) பனிமலை அருவி நெடும் கால் பல சொரிவன என - குளிர்ந்த மலைகள் அருவியாக நீண்ட வாய்க்கால் பலவற்றைச் சொரிவனபோல; பரு வரை புரைவன வன் தோள் - பெரிய மலை போல்வனவாகிய வலிய தோள்களினால்; மண்தோய் துறை பொரு குருதி சொரிந்தார் - மண்ணிலே விழும் படியாக ஆறு போல இரத்தத்தைக் கொட்டியவர்களாய்; ஒருவரை ஒருவர் தொடர்ந்தார் - ஒருத்தரை ஒருத்தர் பற்றிக் கொண்டு; உயர்தலை உடைய உருண்டார் - உயர்ந்த தமது தலைகள் உடைபட்டுப் போக உருண்டோடி அழிந்தனர்.

அரக்கர் தோள்களுக்குப் பெரிய மலைகளும், அவர்கள் தோள்களிலிருந்து சொரிந்த இரத்த வெள்ளங்களுக்கு மலைகளிலிருந்து வரும் அருவி நீர்க்கால்களும் உவமைகளாயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. From strong shoulders like huge mountains — as if snowy hills were pouring out
  2. many long channels of waterfalls — they poured blood in rivers that soaked the earth;
  3. clutching at one another they rolled over, their lofty heads smashed;
  4. for he struck so hard that even the great thunderbolts that fall and crush mountains were shaken.

What the poem says

Aṉumaṉ swings the tree and strikes with a force that would rattle even thunderbolts. The rākṣasas' mountainous shoulders gush blood like snow-fed waterfalls pouring down a hillside, the streams running together into rivers on the ground.

The warriors cling to one another as they fall and roll about with their heads shattered.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paru varai puraivaṉa vaṉ tōḷ paṉi malai aruvi neṭuṅ kāl
corivaṉa pala eṉa, maṇ tōy tuṟai poru kuruti corintār,
oruvarai oruvar toṭarntār uyar talai uṭaiya uruṇṭār;
aru varai neriya viḻum pēr acaṉiyum acaiya aṟaintāṉ.