கம்பராமாயணம் 5563 · சுந்தர 8.26

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அவ்வரக்கர்கள்) வரிசை வரிசையாக நின்று (அனுமன் மேல்) ஆயுதங்களை வீசினர்; பறை புரை விழிகள் பறிந்தார் - (அனுமன் மரங்கொண்டு தாக்கியதனால்) அவர்களில் சிலர் தோற்பறை போன்று அகன்ற கண்கள் பறிக்கப்பட்டவராயினர்; படியிடை நெடிது படிந்தார் - சிலர் தரையின் மீது நீள விழுவாராயினர்; பிறை புரை எயிறும் இழந்தார் - பிறைச்சந்திரன் போன்று வளைந்த தமது பற்களை இழந்தவராயினர் சிலர்; பிடரொடு தலைகள் பிளந்தார் - சிலர், பின் கழுத்தும் தலைகளும் பிளக்கப்பட்டவராயினர்; குறை உயிர் சிதற நெரிந்தார் - சிலர், தமது குற்றுயிரும் சிதறிப் போகும்படி மிதிபட்டு அழிந்தார்; குடரொடு குருதி குழைந்தார் - சிலர் தமது குடலோடு இரத்தத்தையும் வெளியே சொரிந்து அழிந்தனர்; முடை உடல் மறிய முறிந்தார் - சிலர் முடை நாற்றமுள்ள தமது உடம்புகள் அழியும்படி முறியப் பெற்றார்கள்.

வட்டமாயும் பெரியவையாயும் இருத்தலால் தோற்பறை அரக்கர் கண்களுக்கு உவமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some had their drum-like eyes torn out; some sprawled full length upon the ground;
  2. some lost their crescent-shaped fangs; some had their heads split open with their necks;
  3. some were crushed till their last breath scattered; some were pulped in their own guts and blood;
  4. rank after rank they hurled their weapons, and their stinking bodies broke and toppled.

What the poem says

The rākṣasas keep throwing weapons at Aṉumaṉ in wave after wave, and he cuts them down with his tree. The verse lists what happens to them one by one: eyes, big and round as drums, gouged out; bodies flattened on the ground; fangs knocked out; skulls split; others trampled, disembowelled, or broken in half.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṟai purai viḻikaḷ paṟintār, paṭiyiṭai neṭitu paṭintār,
piṟai purai eyiṟum iḻantār, piṭaroṭu talaikaḷ piḷantār,
kuṟai uyir citaṟa nerintār, kuṭaroṭu kuruti kuḻaintār,
muṟai muṟai paṭaikaḷ eṟintār, muṭai uṭal maṟiya muṟintār.