கம்பராமாயணம் 5564 · சுந்தர 8.27

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இகல் பொர முடுகி எழுந்தார் - போர் செய்வதற்கு விரைந்து எழுந்த சில அரக்கர்கள்; புடையொடு விடு கனலின் காய் பொறியிடை - அனுமன் அடிக்கின்ற அடியுடனே வெளிப்படுகின்ற நெருப்பினுடைய எரிக்கின்ற தீப்பொறிகளிலே; மயிர்கள் புகைந்தார் - தம் மயிர்கள் புகையப் பெற்றனர்; தொடையொடு முதுகு துணிந்தார் - சிலர், தம் தொடைகளோடு முதுகும் துண்டிக்கப் பெற்றார்; சுழிபடு குருதி சொரிந்தார் - சுழிகள் உண்டாக இரத்தவெள்ளங்களைக் கக்கினார்கள்; படை இடை ஒடிய நெடும் தோள் பறிதர - தம் கையில் கொண்ட ஆயுதங்கள் நடுவே ஒடிந்து போக நீண்ட தோள்கள் உடலிலிருந்து வேறாகிப் போக; வயிறு திறந்தார் - தம் வயிறும் பிளக்கப்பட்டவர்களானார்கள் சிலர்; இடை இடை மலையின் விழுந்தார் - பயந்து ஓடியவர்கள், போர்க் களத்தின் இடையே பல இடங்களில் மலை போல விழுந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some had their hair singed by the burning sparks of fire that flew out with each blow;
  2. some were cut through thighs and backs; some poured out blood in swirling floods;
  3. their weapons snapped in two, their long arms were torn away, their bellies split open;
  4. those who had sprung up in haste to fight fell here and there like mountains.

What the poem says

Aṉumaṉ's blows strike so hard that sparks fly from them and scorch the warriors' hair. Others are cut through at the thigh and back, or pour out whirlpools of blood.

Their weapons break, arms are wrenched off and bellies burst, and those who rushed in eager for battle fall all over the field like toppled mountains.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puṭaiyoṭu viṭu kaṉaliṉ kāy poṟiyiṭai mayirkaḷ pukaintār,
toṭaiyoṭu mutuku tuṇintār, cuḻipaṭu kuruti corintār,
paṭai iṭai oṭiya, neṭun tōḷ paṟi tara, vayiṟu tiṟantār,
iṭai iṭai, malaiyiṉ, viḻuntār, ikal pora muṭuki eḻuntār.