கம்பராமாயணம் 5565 · சுந்தர 8.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கதையொடு முதிர மலைந்தார் - தண்டாயுதங்களுடன் நன்றாகப் போர் செய்தவர்களும்; கணைபொழி சிலையர் கலந்தார் - அம்புகளைச் சொரிகின்ற விற்களை உடையவர்களும் கூடியவர்களாய்; உதைபட - அனுமனால் உதைபட்டு; உரனும் நெரிந்தார் - தம்மார்பும் நெரியப்பட்டு; உதறொடு குருதி - நடுக்கத்தோடு இரத்தத்தையும்; உமிழ்ந்தார் - வெளியே கக்கினர்; இருளின் மிடைந்தார் - இருளைப் போன்று (கறுத்த வடிவத்துடன்) அங்குக் கூடி நெருங்கிய சில வீரர்கள்; பொடி இடை புதை பட நெடிது புரண்டார் - கீழே கிடந்த புழுதியின் இடையே புதைந்து போக நெடுந் தூரம் புரண்டனர்; விதைபடும் உயிரர் விழுந்தார் - விதைகள் போலச் சிதறிய உயிர்களை உடையவர்களாய் வெற்றுடலாய் விழுந்திட்டார்கள்; விளியொடு விழியும் இழந்தார் - சிலர், வீர ஒலியும் கண்களும் இழந்தவர்களாயினர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some who had crowded in like darkness rolled far through the dust until they were buried;
- some fell with their lives scattered like seeds; some lost their war-cries and their eyes;
- those who fought hard with maces, joined by archers whose bows rained arrows,
- were kicked until their chests were crushed, and spewed blood as they shuddered.
What the poem says
More of the slaughter. Rākṣasas, dark as night, are sent rolling through the dust until they are buried in it. Others drop dead, their lives scattered like seeds, or lose their voices and their eyes.
Mace-fighters and archers who rush at Aṉumaṉ together are kicked so hard that their chests cave in and they vomit blood.