கம்பராமாயணம் 5567 · சுந்தர 8.30

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பற்றித் தாளொடு தோள் பறித்து எறிந்தான் - (அனுமன் சில அரக்கர்களை) பிடித்து, அவர்களது கால்களையும் தோள்களையும் பிய்த்து வீசினான்; வெம்சிறை இற்ற வெற்பு இனம் ஆம் என பாரின் கிடந்தார் - (கால்களும் தோள்களும் அற்ற அரக்கர்கள்) கொடிய இறகுகள் அறுபட்ட மலைக்கூட்டங்கள் போல பூமியில் விழுந்து கிடந்தனர்; கொற்ற வாலிடை அடங்க - வெற்றி பொருந்திய தனது வாலிலே அடக்கியிருக்கச் செய்து; கொடும் தொழில் அரக்கரை சுற்றி வீசலின் - கொடிய செயல்களை உடைய சில அரக்கர்களைச் சுழற்றி வீசியதனால்; பம்பரம் ஆம் என சுழன்றார் - பம்பரம் போலச் சுழன்றார்கள்.

அனுமன் வால், கயிறாகவும், அரக்கர்கள் பம்பரங்களாகவும், அனுமன் பம்பரம் விடுவோனாகவும், இங்கு உவமிக்கப் பெற்றுள்ளன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He seized them, tore off legs and arms and flung them away; upon the earth
  2. they lay like a herd of mountains whose fierce wings had been cut off;
  3. and as he wound the cruel-deeded rākṣasas tight in his victorious tail
  4. and whirled them round and let them fly, they spun like tops.

What the poem says

The metre changes again. Aṉumaṉ grabs rākṣasas and rips off their arms and legs; their limbless bodies lie on the ground like the mountains of legend whose wings Indra cut off to stop them flying.

Others he wraps in his tail, swings round and releases, so that they spin like tops. The tail is the string, the rākṣasas the tops, and Aṉumaṉ the boy spinning them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṟṟit tāḷoṭu tōḷ paṟittu eṟintaṉaṉ; pāriṉ
iṟṟa veñ ciṟai veṟpu iṉam ām eṉak kiṭantār;
koṟṟa vāliṭaik koṭun toḻil arakkarai aṭaṅkac
cuṟṟi vīcaliṉ, pamparam ām eṉac cuḻaṉṟār.