கம்பராமாயணம் 5568 · சுந்தர 8.31

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வாள்கள் இற்றன - (அனுமன் தாக்கியதனால்) அரக்கர் சிலரது வாள்கள் ஒடிந்து போயின; வரி சிலை இற்றன - கட்டமைந்த விற்கள் முறிந்து போயின; வயிரத் தோள்கள் இற்றன - சிலரது வயிரம் போன்ற தோள்கள் அற்றுப் போயின; சுடர் மழுச்சூலம் இற்றன - ஒளியுள்ள மழுக்களும் சூலங்களும் முறிந்து போயின; தாள்கள் இற்றன - சிலரது கால்கள் ஒடிந்தன; நாள்கள் இற்றன நகை எயிற்று ஈட்டம் இற்றன - நட்சத்திரங்கள் விழுவதைப் போல, ஒளி விளங்கும் பற்களின் தொகுதிகள் அற்றுவீழ்ந்தன; படை உடைத்தடக்கை இற்றன - அவர்களின் ஆயுதங்களை உடைய கைகள் அற்று வீழ்ந்தன.

நகை எயிறுகளுக்கு நட்சத்திரங்கள் உவமை. இச்செய்யுள் சில சுவடியில் இல்லை. வருணனை மயமாகத் தொடர்ந்து மிகப் பல பாடல்கள் பாடுவது அருமையான திறனைக் காட்டுவதாகும். பாடுவது முடியுமேனும் அவற்றைப் படிப்பவர் அலுக்காமல் படிக்க வேண்டுமே ! அவ்வாறு அலுப்புத் தோன்றாவண்ணம் சந்தங்களை மாற்றி மாற்றிக் கொடுப்பதன் மூலம் சாதிக்கிறார் கவிச் சக்கரவர்த்தி. ஓரே யாப்பு வகையிலும் சொல்லாட்சி மாற்றியும் நடையை மாற்றியும் வருணனைப் பாடல்களால் ஏற்படக் கூடிய அலுப்பைக் கம்பர் தவிர்த்து விடுகிறார். முந்திய (5518) செய்யுளும் இச் செய்யுளும் ஐஞ்சீர் கொண்ட கலித்துறைகளே; ஆயினும் இச்செய்யுளின் சொல்லமைப்பையும் நடையையும் கருதிப் பார்த்து ஏனைய கலித்துறைகளோடு ஒப்பிட்டுக் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Swords snapped, they snapped; the banded bows; the diamond-hard
  2. shoulders snapped, they snapped; the gleaming battle-axes and tridents;
  3. like stars they broke and fell, they broke, the rows of shining fangs;
  4. legs snapped, they snapped; the great hands that held the weapons.

What the poem says

This verse, missing from some manuscripts, is built on the insistent refrain iṟṟaṉa, 'they snapped', repeated twice in every line: swords, bows, arms, axes, tridents, legs and weapon-bearing hands all break. The gleaming fangs knocked out of rākṣasa mouths fall like shooting stars.

The poet keeps a long run of battle descriptions from becoming monotonous by changing rhythm and word-patterns from verse to verse, even within the same metre.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāḷkaḷ iṟṟaṉa iṟṟaṉa vari cilai vayirat
tōḷkaḷ iṟṟaṉa iṟṟaṉa cuṭar maḻuc cūlam
nāḷkaḷ iṟṟaṉa iṟṟaṉa nakai eyiṟṟu īṭṭam
tāḷkaḷ iṟṟaṉa iṟṟaṉa paṭaiyuṭait taṭak kai.