கம்பராமாயணம் 5569 · சுந்தர 8.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வன்தலை தெறித்த - சிலருடைய வலிய தலைகள் அப்பால் சிதறி விழுந்தன; செறி சுடர்க் கவசம் தெறித்தன - நிறைந்த ஒளியுள்ள கவசங்கள் சிதறின; பைங்கழல் தெறித்த - பசும் பொன்னாலாகிய வீரக்கழல்கள் சிதறி விழுந்தன; பொலந்தார் சிலம்பொடு தெறித்தன - பொன்னரி மாலைகள் ஓசையோடு விழுந்தன; பல்மணி தெறித்த - (ஆபரணங்களில் அழுத்தியிருந்த) இரத்தினங்கள் பலவும் சிதறி விழுந்தன; பெரும் பொறித் திறங்கள் தெறித்தன - அவர்கள் அணிந்திருந்த பெரிய வீரபட்டம் முதலிய விருதுகள் சிதறி விழுந்தன; குண்டலம் தெறித்த - அவர்களது குண்டலங்கள் சிதறின; கண்மணி சிதறி தெறித்தன - கண்ணின் கருமணிகள் சிதறுண்டு வீழ்ந்தன.
சிலம்பு - ஓசை; பொறி - வீரபட்டம், விருது என்பன, “வேந்தன் பெயரால் பொறியும் பெற்றான்.” (சீவக சிந்தாமணி - 1792)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Strong heads flew off; bright close-fitting armour flew apart;
- golden anklets flew off; golden garlands flew off with a jangling;
- gems by the score flew out; the great badges of honour flew off;
- earrings flew off; eyeballs burst and flew out.
What the poem says
A companion to the previous verse, this one repeats teṟitta / teṟittaṉa, 'flew off, scattered'. Heads, armour, warrior anklets, golden garlands, jewels, earrings and even eyeballs go flying.
Among the things scattered are the rākṣasas' 'great insignia' (poṟi), the medals and plates of honour awarded to warriors for valour.