கம்பராமாயணம் 5570 · சுந்தர 8.33

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உக்க பல் குவை உக்கன துவக்கு எலும்பு உதிர்வு உற்று
உக்க முற்கரம் உக்கன முசுண்டிகள் உடைவுற்று
உக்க சக்கரம் உக்கன உடல் திறந்து உயிர்கள்
உக்க கப்பணம் உக்கன உயர்மணி மகுடம்.

பொருள் · Meaning in Tamil

பல்குவை உக்க - அரக்கர்களது பற்களின் குவியல்கள் சிந்தின; துவக்கு எலும்பு உதிர்வுற்று உக்கன - தோல்களும் எலும்புகளும் சிதறி அழிந்தன; முற்கரம் உக்க - சம்மட்டி என்ற ஆயுதங்கள் சிதறி விழுந்தன; முசுண்டிகள் உடைவுற்று உக்கன - முசுண்டி என்னும் ஆயுதங்களும் ஒடிந்து சிதறின; சக்கரம் உக்க - சக்கரம் என்னும் ஆயுதங்கள் சிதறின; உடல் திறந்து உயிர்கள் உக்கன - உடல்கள் பிளக்கப்பட்டு உயிர்கள் சிந்திப் போயின; கப்பணம் உக்க - அரிகண்டம் என்னும் ஆயுதங்கள் சிதறிப் போயின; உயர் மணி மகுடம் உக்கன - சிறந்த இரத்தின கிரீடங்கள் சிதறிப் போயின.

துவக்கு - தோல்; இறுதல் - அற்று நீங்குதல்; தெறித்தல் - சிதறி நீங்குதல்; உகுதல் - சிந்தி நீங்குதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Heaps of teeth spilled out; skin and bones were shed and spilled;
  2. hammers spilled; muśuṇṭis broke apart and spilled;
  3. discuses spilled; bodies split open and lives spilled out;
  4. spiked collars spilled; tall jewelled crowns spilled.

What the poem says

The third verse in this series, built on ukka / ukkaṉa, 'spilled, dropped'. Teeth, skin, bones, hammers, muśuṇṭi clubs, discuses, spiked iron collars and jewelled crowns all fall, and lives spill out of split bodies.

The three verbs of these verses differ in shade: iṟutal is to snap off, teṟittal to fly off scattering, and ukutal to spill or drop away.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ukka paṟkuvai ukkaṉa tuvakku elumpu utirvuṟṟu
ukka muṟkaram ukkaṉa mucuṇṭikaḷ uṭaivuṟṟu
ukka cakkaram ukkaṉa uṭal tiṟantu uyirkaḷ
ukka kappaṇam ukkaṉa uyar maṇi makuṭam.