கம்பராமாயணம் 5571 · சுந்தர 8.34

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தாள்களால் பலர் தடக்கைகளால் பலர் தாக்கும்
தோள்களால் பலர் சுடர் விழியால் பலர் தொடரும்
கோள்களால் பலர் குத்துகளால் பலர் தத்தம்
வாள்களால் பலர் மரங்களினால் பலர் மடிந்தார்.

பொருள் · Meaning in Tamil

தாள்களால் பலர் - அனுமனது கால்களினால் பலரும்; தடக்கைகளால் பலர் - பெரிய கைகளால் பலரும்; தாக்கும் தோள்களால் பலர் - மோதும் தோள்களால் பலரும்; சுடர் விழியால் பலரும் - ஒளி வீசும் விழிகளில் உண்டாகும் நெருப்பினால் பலரும்; தொடரும் கோள்களால் பலர் - பற்றிப்பிடித்தலால் பலரும்; குத்துகளால் பலர் - கைகளால் குத்துதலினால் பலரும்; தம் தம் வாள்களால் பலரும் - அவரவர்களது வாள்களாலேயே பலரும்; மரங்களினால் பலர் - மரங்களைக் கொண்டு எறிவதால் பலரும்; மடிந்தார் - இறந்தார்கள்.

கோள் - பற்றிக்கொள்ளுதல். 'தொடரும் கோள்' - மேன் மேல் மிகுகின்ற வலிமை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Many died by his feet, many by his great hands, many
  2. by his battering shoulders, many by his blazing eyes, many by his
  3. relentless grip, many by his blows, many by their own
  4. swords, and many by the trees.

What the poem says

Another catalogue verse, this time built on palar, 'many': the Kiṅkarar die in every possible way — kicked, struck by Aṉumaṉ's hands, rammed by his shoulders, burned by the fire of his glaring eyes, crushed in his grip, punched, killed by their own swords turned against them, or battered with trees.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāḷkaḷāl palar taṭak kaikaḷāl palar tākkum
tōḷkaḷāl palar cuṭar viḻiyāl palar toṭarum
kōḷkaḷāl palar kuttukaḷāl palar tam tam
vāḷkaḷāl palar maraṅkaḷiṉāl palar maṭintār.