கம்பராமாயணம் 5572 · சுந்தர 8.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிலர், ஈர்க்கபட்டனர் - சில அரக்கர்கள் அனுமன் அவர்களைப் பிடித்து இழுத்தலால் இறந்தார்கள்; சிலர் இடி உண்டுபட்டனர் - மற்றும் சிலர், இடிக்கப்பட்டு இறந்தனர்; சிலர் பேர்க்க பட்டனர் - சிலர் அவ்விடம் விட்டுப் பெயர்த்து எறியப்பட்டு இறந்தனர்; சிலர் பிடிஉண்டு பட்டார் - வேறு சிலர் அனுமனால் பிடிக்கப்பட்டு இறந்தனர்; சிலர் ஆர்க்க பட்டனர் - இன்னும் சிலர் கட்டப்பட்டு இறந்தனர்; சிலர் அடிஉண்டு பட்டார் - மற்றுஞ் சிலர் அனுமனால் அடிக்கப்பட்டு இறந்தனர்; சிலர் பார்க்க பட்டனர் - வேறு சிலர் அனுமன் கோபித்துப் பார்த்ததாலே இறந்தனர்; சிலர் பயமுண்டு பட்டனர் - வேறு சிலர் பயந்து இறந்தனர். ஆர்த்தல் - கட்டுதல்; “ஆர்த்த கணவன் அகன்றான்” (சிலப் - 9; 37)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some were dragged and died; some were battered and died;
- some were wrenched from their place and died; some were seized and died;
- some were bound fast and died; some were beaten and died;
- some were merely looked at and died; some were struck with fear and died.
What the poem says
The pattern continues with paṭṭār, 'they fell, they died'. Aṉumaṉ drags some, pounds some, uproots some, grabs some, ties up some and beats others to death.
The climax is in the last line: some die simply because Aṉumaṉ glares at them in anger, and others die of sheer fright.