கம்பராமாயணம் 5575 · சுந்தர 8.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உறக்கினும் கொல்லும் - அரக்கர் சோர்வுற்ற நிலையிலும் அனுமன் அவர்களைக் கொல்வான்; உணரினும் கொல்லும் - நல்லுணர்வு பெற்ற நிலையிலும் அரக்கர்களைக் கொல்வான்; மால் விசும்பில் பறக்கினும் கொல்லும் - பெரிய ஆகாயத்தில் அரக்கர்கள் பறந்தாலும் அவர்களைக் கொல்லுவான்; படரினும் கொல்லும் - தரையில் நடந்து சென்றாலும் அவர்களைக் கொல்வான்; மின் படைக்கை நிறக் கருங் கழல் அரக்கர் - மின்னலை உண்டாக்கும் படை உடைய கையைப் பெற்ற நிறமுடைய வலிய வீரக்கழல் அணிந்த அரக்கர்கள்; நெறிதொறும் - வழிகளில் எல்லாம்; பொறிகள் பிறக்க - தீப் பொறிகள் தோன்ற; நின்று எறிபடைகளை - நின்று வீசி எறியும் ஆயுதங்களை; தடக்கையால் பியையும் - அனுமன் தனது பெரிய கைகளால் பிசைந்து நொறுக்குவான்.
பிறங்க - தோன்ற; எதுகை நோக்கி வலிந்தது; “பிறக்க” என ஆயிற்று. “விளங்க” என்றும் பொருள் கொள்ளலாம். பியைதல் - பிசைதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He kills them if they are dazed, kills them if they are alert; in the vast sky
- he kills them if they fly, kills them if they go on foot; and the weapons
- that the rākṣasas with lightning-bright weapons in hand and strong warrior anklets
- stood and hurled, with sparks springing along every path, he crushes in his great hand.
What the poem says
No rākṣasa can escape: whether stunned or fully alert, flying through the sky or running on the ground, Aṉumaṉ kills them.
The weapons they hurl at him, flashing sparks as they come, he simply catches and crumples in his huge hand.