கம்பராமாயணம் 5577 · சுந்தர 8.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சுருதியே அன்ன மாருதி - வேதத்தையே ஒத்த (நிலை பெறுதலும் தவறாமையும் உடைய) அனுமன்; கருது காலினும் கையினும் வாலினும் கட்டி - எண்ணத்தக்க காலினாலும் கைகளினாலும் வாலினாலும் சில அரக்கர்களைச் சேர்த்துக் கட்டி; மரத்திடைத் துரப்பான் நிருதர் - மரத்தின் நடுவில் மோதுவதால் (அப்போது) அந்த அரக்கர்கள்; எந்திரத்து இடு கரும்பு ஆம் என நெரிவார் - ஆலையிலிட்டு ஆட்டுகின்ற கரும்பு போன்று உடல் நொறுங்கிப் போனார்கள்; குருதி - (அவ்வுடலிலிருந்து பெருகுகின்ற) இரத்தம்; சாறு என குரைகடல் கூனில் பாய்வது - கருப்பஞ்சாறு போல ஒலிக்கின்ற கடலாகிய ஒரு மிடாவில் போய் பாய்கின்றதாகும். கூன் - வாய் அகன்று உட்குழிந்த மண் பாத்திரம். இது மிடா எனப்படும். ஆலையில், கருப்பஞ்சாறு விழுவதற்கு வைக்கப் பட்டிருப்பது. “கருப்பேந்திரத்து ஒழுகு சாறகன் கூனை” (கம்ப. 4641). கரும்பு, அரக்கர்களுக்கும், கரும்பு ஆலை மரங்களின் நெருக்கத்துக்கும், கரும்புச் சாறு, உடல்களின் இரத்தத்துக்கும், பெரும் பாத்திரம் கடலுக்கும் உவமைகளாக வந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Binding them with his mighty legs, his hands and his tail,
- Māruti, steadfast as the Veda itself, crushes them against the tree;
- the rākṣasas are squeezed like sugarcane fed into a press,
- and their blood gushes like juice into the roaring sea, as into a great vat.
What the poem says
Aṉumaṉ, called Māruti as son of the wind-god, and likened to the Veda for his unswerving steadiness, bundles rākṣasas together with his legs, hands and tail and crushes them against a tree trunk.
The image is a sugarcane press: the rākṣasas are the canes, the tree is the crushing beam, their blood is the juice, and the ocean is the wide earthen vat that catches it.