கம்பராமாயணம் 5578 · சுந்தர 8.41

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எடுத்து அரக்கரை எறிதொறும் அவர் உடல் எற்றக்
கொடித் திண் மாளிகை இடிந்தன மண்டபம் குலைந்த
தடக்கை யானைகள் மறிந்தன கோபுரம் தகர்ந்த
பிடிக் குலங்களும் புரவியும் அவிந்தன பெரிய.

பொருள் · Meaning in Tamil

அரக்கரை எடுத்து - அனுமன் அந்த அரக்கர்களைத் தூக்கி; எறிதலும் - வீசிய அளவில்; அவர் உடல் எற்ற - அவர்களது உடல் போய்த்தாக்கியதனால்; கொடித்திண் - கொடிகள் கட்டிய வலிய; மாளிகை இடிந்தன - உயர்ந்த வீடுகள் நொறுங்கிப் போயின; மண்டபம் குலைந்த - மண்டபம் உருக்குலைந்து அழிந்து போயின; தடக்கை யானைகள் மறிந்தன - பெரிய துதிக்கைகளை உடைய ஆண் யானைகள் இறந்தன; பெரிய பிடிக்குலங்களும் புரவியும் அவிந்த - பெரிய பெண் யானைகளின் கூட்டங்களும் பெரிய குதிரைக் கூட்டங்களும் அழிந்தன. பெரிய, குலம் என்பன, பிடிக்கும் புரவிக்கும் அடை மொழிகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he picked up the rākṣasas and flung them, their bodies struck,
  2. and strong mansions hung with banners collapsed; halls fell apart;
  3. great-trunked bull-elephants rolled over dead; gate-towers were shattered;
  4. and herds of great cow-elephants and horses perished.

What the poem says

The rākṣasas whom Aṉumaṉ hurls become missiles themselves. Their bodies crash into Ilaṅkai's bannered mansions and halls, bringing them down, and smash the gate-towers.

The city's elephants, bulls and cows alike, and its horses are killed by the falling bodies.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṭuttu arakkarai eṟitalum avar uṭal eṟṟa
koṭit tiṇ māḷikai iṭintaṉa maṇṭapam kulainta
taṭak kai yāṉaikaḷ maṟintaṉa kōpuram takarnta
piṭik kulaṅkaḷum puraviyum avintaṉa periya.