கம்பராமாயணம் 5580 · சுந்தர 8.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆடல் மா களிறு அனையவன் - பகைவரைக் கொல்லும் வலிமை பொருந்திய பெரிய ஆண் யானை போன்ற அனுமன்; அரக்கியர்க்கு அருளி - அரக்கியர் சிலர் படுகின்ற துன்பத்தைக் கண்டு அவர்கள் மேல் கருணை கொண்டு; சிலரை வீடு நோக்கியே செல்க என்று விட்டான் - சில அரக்கரை “உங்கள் வீடு நோக்கிச் செல்லுங்கள்” என்று கொல்லாது விட்டான்; சிலவரை கூடினார்க்கு அவர் உயிர் என கொடுத்தான் - சில அரக்கரை, அப்போதுதான் சேர்ந்தவராக இளம் பெண்களுக்கு உயிர் போன்று இருப்பவர் என்று, கொல்லாது விடுத்தான்; ஊடினார்க்கு - ஊடல் கொண்ட மகளிர்களுக்கு, இரங்கி; அவர் மனை தொறும் சிலவரை உய்த்தான் - அவர் வீடு தோறும் அவர்களது கணவர் போய்ச் சேருமாறு அவர்களை அனுப்பி விட்டான். இதனால், அனுமனுக்கு வீரத்தோடு ஈரமும் (இரக்கம்) இருந்தது என்பது புலப்படுகின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who was like a great fighting bull-elephant, taking pity on the rākṣasīs,
- let some go, saying, 'Go off home';
- some he gave back to the women newly united with them, as being their very life;
- and some he sent off to the homes of the wives who were sulking at them.
What the poem says
In the middle of the slaughter Aṉumaṉ shows mercy, out of pity for the rākṣasa women. He lets some warriors go home. He spares those who have only just married, since they are as life itself to their young brides.
He even sends some back to wives who were in a lovers' sulk with them, so that they can make up. The poet shows that Aṉumaṉ's valour is joined with compassion.