கம்பராமாயணம் 5581 · சுந்தர 8.44

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிதறி, தருஎலாம் உடல் - (அனுமன் வீசிஎறிந்ததனால்) நாற்புறத்திலும் சிதறுண்டு மரங்களில் எல்லாம் அரக்கர்களது உடல்கள்; தெற்றி எலாம் உடல் - தெருத்திண்ணைகளில் எல்லாம் உடல்கள்; சதுக்கத்து உருஎலாம் உடல் - நாற்சந்தி கூடும் இடங்களின் வடிவம் எல்லாம் உடல்கள்; உவரி எலாம் உடல் - கடல்கள் எங்கும் உடல்கள்; உள் ஊர் கருஎலாம் உடல் - இலங்கை நகரின் நடு இடம் எல்லாம் உடல்கள்; காயம் எலாம் உடல் - ஆகாயம் முழுவதும் உடல்கள்; அரக்கர் தெரு எலாம் உடல் - அரக்கர்கள் வாழும் தெருக்களில் எல்லாம் உடல்கள்; தேயம் எலாம் உடல் - இலங்கைப் பிரதேசம் முழுவதும் உடல்களாக நிரம்பிக் கிடந்தன.

சதுக்கம் - நாற்சந்தி. தெற்றி - திண்ணை. அரக்கர்களது உயிர் கழிந்த வெற்றுடம்பு, எங்கும் கிடந்தமை இங்கு கூறப்படுகின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bodies on every tree, bodies on every porch, bodies filling
  2. every square at the crossroads, bodies all through the sea, bodies in all
  3. the heart of the inner town, bodies all over the sky, bodies
  4. in every street of the rākṣasas, bodies strewn across the whole land.

What the poem says

Built on the refrain uṭal, 'bodies', this verse shows the corpses Aṉumaṉ has flung scattered everywhere: hanging in trees, sprawled on the raised verandas of houses, piled at the crossroads, floating in the sea, filling the centre of the city, the sky, the streets and the whole land of Ilaṅkai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taru elām uṭal, teṟṟi elām uṭal, catukkattu
uru elām uṭal, uvari elām uṭal, uḷḷūrk
karu elām uṭal, kāyam elām uṭal, arakkar
teru elām uṭal, tēyam elām uṭal citaṟi.