கம்பராமாயணம் 5582 · சுந்தர 8.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாருதி தான் எலாரையும் சாடுகை தவிரான் - அனுமன் தான் ஒருத்தனாகவே, எதிர்ப்பட்ட அரக்கர் யாவரையும் கொல்லுதலினின்றும் நீங்கானல்லன்; (அதனால்) ஊன் எலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான் - உடம்புகளிலிருந்து உயிர்களைக் கவர்ந்து செல்ல வேண்டிய எமன் (மாள்பவர் பலராகி விட்டதால், தனது தொழிலைச் செய்ய இயலாதவனாய்) தளர்ந்து வலிமை கெட்டான்; சுற்றி - (எடுத்துக் கொண்டு போவார் எவரும் இன்மையின்) அவ்வரக்கர் உயிர் எங்கும் சுழன்று; மீன் எலாம் உயிர் - நட்சத்திர மண்டலம் முழுவதும் உயிராகவும்; மேகம் எலாம் உயிர் - மேகமண்டலங்களில் எல்லாம் உயிராகவும்; மேல் மேல் வான் எலாம் உயிர் - மற்றும் உள்ள இடைவெளிகளில் எல்லாம் உயிராகவும் நிரம்பிக் கிடந்தன.
முன் கவிதையில் உடல்கள், இக் கவிதையில் உயிர்கள் சிதறியமை கூறப்பட்டன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Kālaṉ, whose task is to seize the lives from all flesh, grew weary and worn out;
- for Māruti would not cease from smiting every one of them;
- lives filled all the stars, lives filled all the clouds, lives
- filled all the heavens above, and lives filled everything else, whirling about.
What the poem says
The companion to the previous verse: there it was bodies everywhere, here it is souls. Aṉumaṉ kills so many, so fast, that Kālaṉ, the god of death whose job is to carry away each life, is exhausted and cannot keep up.
With no one to collect them, the departed lives of the rākṣasas swirl about, filling the stars, the clouds and the whole sky.