கம்பராமாயணம் 5583 · சுந்தர 8.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆக இச்செருவிளைவுறும் அமைதியில் - இவ்வாறு, இப்போர் நடக்கும் சமயத்தில்; அரக்கர் மோகம் உற்றனர் ஆம் என - சில அரக்கர்கள் அறிவு மயக்கம் கொண்டவர்கள் போல; முறை முறை முனிந்தார் - மேன் மேலும் கோபம் கொண்டவர்களாக; மாகம் முற்றவும் - வானிடம் முழுவதும்; மாதிரம் முற்றவும் வளைந்தார் - திக்குகள் முழுவதும் சூழ்ந்து கொண்டவராய்; மேகம் ஒத்தனர் - கரிய மேகம் போல விளங்கினர்; மாருதி வெய்யவன் ஒத்தான் - அனுமன் சூரியனைப் போன்று விளங்கினான்.
பலபடியாகச் சிதறுண்டு போன அரக்கர்கள், இச்சமயத்தில் சினம் கொண்டு சூழ்வது அவர்களது அறிவின்மையின் செயல். இதை 'மோகம் உற்றனர்' என்ற தொடர் காட்டுகிறது. மாகம் - வான்; மாதிரம் - திக்கு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So, as this battle went on, the rākṣasas, as if gripped by delusion,
- grew angrier and angrier, wave upon wave,
- and closed round him through the whole sky and all the directions;
- they were like the clouds, and Māruti was like the sun.
What the poem says
Though scattered and slaughtered, the surviving Kiṅkarar foolishly regroup — 'as if deluded', the poet says — and in rising anger surround Aṉumaṉ on every side, filling the sky.
They are like dark clouds massing round the sun, and the sun is Aṉumaṉ, whom the clouds can cover for a moment but never put out.