கம்பராமாயணம் 5584 · சுந்தர 8.47

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அடல் அரக்கரும் - வலிமைமிக்க அந்த அரக்கர்களும்; ஆர்த்தலின், அலைத்தலின் - இரைதலாலும்; (அனுமனால் இங்கும் அங்கும்) அலைக்கப்படுவதாலும்; அயர புடை பெருத்து உயர் பெருமையின் - (கண்டவர்) சோரும்படி பக்கங்கள் பருத்து உயர்ந்து தோன்றுகின்ற பெருந்தோற்றத்தாலும்; கருமையின் பொலிவின் - கருநிறத்தாலும், மிகுதியாய் (நிறைந்து) காணப்படுவதாலும்; மிடல் அயில்படை மீன் என விலங்கலின் - அவர்கள் கொண்டுள்ள வலிய வேல்படைகள் மீன்கள் போன்று விளங்குவதனாலும்; கலங்கும் கடல் நிகர்த்தனர் - (கடையும் போது) கொந்தளிக்கும் கடலுக்கு ஒப்பாக விளங்கினர்; மாருதி மந்தரம் கடுத்தான் - அனுமன், (கடலைக் கலக்கும்) மந்தரமலையை ஒத்தான்.

ஆர்த்தல், அலைதல், பெருந் தோற்றம், கருமை, மீன் விலங்குதல் அரக்கர்க்கும் கடலுக்கும் பொருந்தும் பொதுத்தன்மைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The mighty rākṣasas too — in their roaring, in being tossed to and fro,
  2. in their vast bulk swelling so that onlookers fainted, in their darkness, in their teeming numbers,
  3. and with their strong spear-weapons flashing like fish —
  4. were like the churning sea; and Māruti was like Mount Mantara.

What the poem says

The rākṣasa host is compared point by point to the Ocean of Milk being churned: they roar as the sea roars, are thrown back and forth like its waves, are vast and dark like its waters, and their gleaming spears flash like fish.

Aṉumaṉ, in the middle stirring them up, is Mount Mantara, the churning rod.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭal arakkarum, ārttaliṉ, alaittaliṉ, ayarap
puṭai peruttu uyar perumaiyiṉ, karumaiyiṉ, poliviṉ,
miṭal ayil paṭai mīṉ eṉa vilaṅkaliṉ, kalaṅkum
kaṭal nikarttaṉar, māruti mantaram kaṭuttāṉ.