கம்பராமாயணம் 5586 · சுந்தர 8.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மானம் உற்ற தம்பகையினால் முனிவுற்று வளைந்த - செருக்குக் கொண்ட தமது பகைமைக் குணத்தினாலே, கோபம் கொண்டு (அனுமனைச்) சூழ்ந்து கொண்டவரும்; மீன் உடைக்கடல் உலகினின் உள எலாம் மிடைந்த - மீன்களை உடைய கடலினால் சூழப்பட்ட இலங்கையிலே உள்ள இடம் முழுவதும் நெருங்கியிருப்பவரும்; ஊன் அற கொன்று துகைக்கவும் ஒழிவு இலா நிருதர் - (கண்ணில் கண்டவர்) உடம்புகளை எல்லாம் அழித்தொழிக்கவும் அழிந்திடாமல் பெருகித் தோன்றுபவருமான அரக்கர்கள்; ஆனை ஒத்தனர் - யானைகளைப் போன்றவரானார்கள்; அனுமன் ஆள் அரி ஒத்தான் - அனுமன் (மிருகங்களை) ஆளும் தன்மை உள்ள சிங்கத்தை ஒத்தவனானான்.
அரக்கர்களுக்கு யானைத் திரளும், அனுமனுக்கு, சிங்கமும் உவமைகளாக வந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The rākṣasas who, enraged by their proud enmity, closed in around him,
- who crowded every place in this land ringed by the fish-filled sea,
- and who never gave out, though he killed and trampled them to pulp,
- were like elephants; Aṉumaṉ was like the lion, king of beasts.
What the poem says
The rākṣasas keep coming: driven by pride and hatred, they surround Aṉumaṉ and swarm over every corner of the island, and no matter how many he crushes, more appear.
The poet now likens them to a herd of elephants, huge but helpless before the lion that rules the beasts, which is Aṉumaṉ.