கம்பராமாயணம் 5587 · சுந்தர 8.50

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இகலில் - போரில்; எய்த எற்றின - (அவ்வரக்கர்கள்) அம்பு கொண்டு வீசியவைகளாலும், தாக்கியவைகளாலும்; எறிந்தன ஈர்த்தன - வீசி எறிந்தவைகளாலும் இழுத்தவைகளாலும்; பொய்த - சொரிந்தவைகளாலும்; குத்தின பொதுத்தன - குத்தியவைகளாலும் உள் அழுத்தியவைகளாலும், துளைத்தன போழ்ந்த - துளைத்தனவற்றாலும் பிளந்தனவற்றாலும், கொய்த சுற்றின - பறித்தனவாலும் சுற்றினவாலும்; பற்றின குடைந்தன - பிடித்தனவாலும் குடைந்தனவாலும்; பொலிந்த - விளங்கிய; ஐயன் மல் பெரும் புயத்தன புண் அளப்பு அரிய - சிறப்புக்குரிய அனுமனது வலிமையில் சிறந்து விளங்கும் பெரிய தோள்களில் உண்டான விழுப்புண்கள் அளவிடமுடியாதனவாய் மிகுந்திருந்தன.

வினை முற்றுகளை அடுக்கிச் சந்த நயம் விளைதல் காண்க. வருணனையில் சலிப்பு ஏற்படாமைக்கு இதுவும் ஓர் உத்தி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. From what they shot, what they struck, what they hurled and what they dragged in the fight,
  2. what they rained down, what they stabbed, what they drove in, what pierced and what split,
  3. what tore, what coiled, what seized and what gouged — the wounds that adorned
  4. the lord's great mighty shoulders were beyond all counting.

What the poem says

Aṉumaṉ does not come through untouched. The verse strings together a rapid run of verbs for everything the rākṣasas did to him — shooting, striking, throwing, dragging, raining down, stabbing, piercing, boring, splitting, tearing, binding, seizing and gouging.

The wounds on his great shoulders are countless, but they are honourable wounds of battle, which 'adorn' him. Piling up verbs this way creates a driving rhythm and keeps the battle description fresh.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eyta eṟṟiṉa eṟintaṉa īrttaṉa ikalip
poyta kuttiṉa potuttaṉa toḷaittaṉa pōḻnta
koyta cuṟṟiṉa paṟṟiṉa kuṭaintaṉa polinta
aiyaṉ mal perum puyattaṉa puṇ aḷappu aritāl.